சித்த வைத்திய அகராதி 8901 - 8950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8901 - 8950 மூலிகைச் சரக்குகள்


நிம்பயிலை - வேப்பிலை
நிம்பயீர்க்கு - வேப்பிலையீர்க்க
நிம்பபெண்ணெய் - வேப்பெண்ணெய்
நிபக்கியமரம் - நறுமுருங்கைமரம்
நிபக்குரோதமரம் - ஆலமரம்
நிபதீசமரம் - சுனைப்புங்குமரம்
நிபாச்செடி - சிவதுளசிச்செடி
நிரம்பியமரம் - வாழைமரம்
நிரைகிளம்பி - சூலாடு
நிர்விஷக்கிழங்கு - சாடுவார், நிற்பிசி, சடாவார்கிழங்கு
நிலஅவுரி - பேரவுரி
நிலகந்தகச்செடி - நொச்சிச்செடி
நிலகிக்கொடி - கள்ளிக்கொடி
நிலகிக்கொத்தவரை - சீனிக்கொத்தவரைச்செடி
நிலக்கடம்புமரம் - சிறுகடம்புமரம்
நிலக்கடலை - வேர்க்கடலை
நிலக்கடற்செடி - கடலாரைசெடி
நிலக்கலிக்கொடி - பெருங்கட்டுக்கொடி
நிலக்கிழங்கு - பிண்டம்
நிலக்குண்டிக்கொடி - குன்றிமணிக்கொடி
நிலக்குதாக்கிழங்கு - சேனைக்கிழங்கு
நிலக்குமிழ்ச்செடி - சிறுகுமிழ்ச்செடி
நிலக்கூந்தற்கீரை - எலிச்செவிக்கீரை
நிலஞ்சோதிவிருட்சம் - சோதிவிருட்சம்
நிலகத்தூரிச்செடி - கருவூமத்தைச்செடி
நிலத்துத்திச்செடி - துத்திச்செடி
நிலத்தும்பைச்செடி - தும்பைச்செடி
நிலத்துளசிச்செடி - துளசிச்செடி
நிலப்பயிர் - பெண்
நிலப்பனைச்செடி - தரைப்பனைச்செடி
நிலப்பாளை - பங்கம்பாளைச்செடி
நிலப்பூசணி - காட்டுப் பூசணிச்செடி
நிலமகட்கொடி - சீதாசெங்கழுநீர்க்கொடி
நிலம்புக்கொடி - தாளிக்கொடி
நிலம்புச்சீத்தா - சீத்தாமரம்
நிலம்புரண்டி - பூமிபுரண்டிச்செடி
நிலவவிருட்சம் - சோதிவிருட்சம்
நிலவாகைச்செடி - நிலஆவரைச்செடி
நிலவாமியக்கொடி - சீதாசெங்கழுநீர்க்கொடி
நிலவாவரைச்செடி - நிலவாகைச்செடி
நிலவாழை - கல்வாழைசெடி
நிலவிப்பனை - நிலப்பனை
நிலவிளா - குட்டிவிளாச்செடி
நிலவீரியம் - பூநீர்
நிலவுகாய் - எருக்கங்காய்
நிலவுகாய்ச்செடி - எருக்கஞ்செடி
நிலவேம்பு - காட்டுவேம்பு
நிலவேர் - ஆண், பூநாகம், நாக்கிலாம்பூச்சி
நிலாவரை - நிலவாகை
நிவசனம் - புடவை, சேலை, துகில்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal