சித்த வைத்திய அகராதி 8951 - 9000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8951 - 9000 மூலிகைச் சரக்குகள்


நிழற்காந்தவிருட்சம் - சாயா விருட்சம்
நிழனாவல்மரம் - கருநவ்வல்மரம்
நின்றாற்சிணுங்கி - நின்றுசிணுங்கி
நின்றிகாவேலம் - சிற்றேலம்
நின்றிடந்தீஞ்சான் - மல்லைப்பூடு
நின்றிதப்பசலி - தரைப்பசலிக்கொடி
நின்றுசிணுங்கிச்செடி - நின்றாற்சிணுங்கிச்செடி
நின்றோசிக்கற்றாழை - நாகபடக்கற்றாழை
நீட்டக்கத்திரி - கொடிக்கத்திரி
நீட்டக்காவிதக்காய் - சுரைக்காய்
நீட்டக்கொத்தவரை - பெருங்கொத்தவரைச்செடி
நீட்டப்பாகல் - கொம்பன்பாகல்
நீட்டாகலமரம் - பம்பளிமாகமரம்
நீட்டினவிரல் குறித்தான் செடி - கிரந்திநாயகச் செடி
நீட்டுக்காற்செடி - முடவாட்டுக் காற்செடி
நீத்தங்கிழங்கு - தண்ணீர் விட்டான் கிழங்கு
நீத்திருணி - காமப்பால்
நீபமரம் - வெண்கடம்பமரம்
நீம்பயப்பூடு - பனிதாங்கிப்பூடு
நீரடிமுத்து - நீர்வெட்டிமுத்து
நீரடைக்கொடி - பன்றிப்புடற்கொடி
நீராளிச்செடி - ஆற்றலரிச்செடி
நீராகாசிதப்புல் - நான்முகப்புல்
நீராகாரம் - அன்னாகாரம்
நீராகாரிக்கொடி - பாலாட்டங்கொடி
நீராரைக்கீரை - ஆரைக்கீரை
நீராவியமரம் - பாற்கடுக்காய் மரம்
நீரிண்டங்கொடி - நுரையிண்டங்கொடி
நீரிலாத்தாமரை - கற்றாமரை
நீருண்டிவேர் - தண்ணீர்விட்டான் கிழங்கு
நீருள்ளி - வெண்காயம்
நீரொருகக்கொடி - தாமரைக்கொடி
நீர்க்கடம்பு - நிலக்கடம்புச்செடி
நீர்க்கடலை - பேய்க்கடலைச்செடி
நீர்க்கட்டுக்கொடி - பெருங்கட்டுக்கொடி
நீர்க்கண்டகிச் செடி - நீர்முள்ளிச்செடி
நீர்க்கிழங்கு - சிறுகிழங்கு
நீர்க்குடத்திக் கிழங்கு - தண்ணீர்விட்டான்கிழங்கு
நீர்க்குண்டிச்செடி - வெண்நொச்சிச்செடி
நீர்க்குத்திரக்கொடி - நீர்ச்சுண்டிக்கொடி
நீர்க்கும்பிச்செடி - நீர்முள்ளிச்செடி
நீர்க்குவளைக்கொடி - நீலோற்பலக்கொடி
நீர்க்குளிரிச்சசெடி - குளிரிச்செடி
நீர்க்குறிஞ்சாக்கொடி - வெண்குறிஞ்சாக்கொடி
நீர்ச்சுண்டிக்கொடி - நெட்டிக்கொடி
நீhச்சூசமுத்து - நீர்வெட்டிமுத்து
நீர்ச்சேம்பு - சேம்புச்செடி
நீர்ச்சோனப்பிரமி - நீர்ப்பிரமி
நீத்தாளி - தாளிக்கொடி
நீர்நிதித்தாமரை - செந்தாமரை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal