சித்த வைத்திய அகராதி 951 - 1000 மூலிகைச் சரக்குகள்
அவலாவிச்செடி - பெரும்பீழை
அவலிச்செடி - பூனைக்காலி
அவனாசிகப்பழம் - ஆரஞ்சுப்பழம்
அவாகெசதும்பை - பெருதும்பை
அவாவிகைக்கொடி - பெருந்தெல்லுக்கொடி
அவாவுளப்பிச்செடி - பிரமி
அவித்துருமமரம்- இலுப்பை
அவியரிசி - புட்டரிசி
அவிராசகச்செடி - பெருந்தேட்கொடுக்குச்செடி
அவிரிச்செடி - அவுரிச்செடி
அவிரிலாச்செடி - பெரும்புள்ளடி
அவிருகம் - அதிவிடையம்
அவிர்ப்புல் - பீனிசப்புல்
அவுசூசிகச்செடி - தொடரி
அவுடதம் - ஔசதம், மருந்து
அவுரிச்செடி - நீலிச்செடி
அவுரிதநீர் - அம்புகாநீர்
அழகவேதம் - அதிவிடையம்
அழகியவாணன் - நெற்கதிர்
அழகுசம்பங்கி - கொடிச்சம்பங்கி
அழகுசிவப்பிமரம் - செவ்வகத்தி
அழகிகச்செடி - எருக்கஞ்செடி
அழகித்திப்பிலி - பெருந்திப்பிலி
அழல்விரை - நேர்வாளம்
அழற்காய்ச்செடி- மிளகாய்செடி
அழற்சூடிச்செடி - கொடிவேலி
அழற்பாற்செடி - எருக்கஞ்செடி
அழிஞ்சகிக்கொடி - பெருஞ்செருப்படைக்கொடி
அழிஞ்சில்மரம் - ஏரழிஞ்சில்மரம்
அழிஞ்சேபமரம் - பெருநாங்கில்
அழுகண்ணிச்செடி - ருதந்தி
அழுகைமாதுச்செடி - கௌதும்பைச்செடி
அழுக்கற்றும்பூ - பூநீறு
அழுக்குநீர் - சூதகநீர்
அளத்துபச்சை - மருக்கொழுந்து
அளத்துப்பாசிதமரம் - பெருமுன்னைமரம்
அளத்துப்பூசணிக்கொடி - பெரும்பூசணிக்கொடி
அளப்பக்கொற்றான் - முடக்கொத்தான்
அளருகக்கொடி - தூதுவளை
அளேசுவிடையம் - அதிவிடையம்
அளோpயப்பூடு - பெருவெங்காயம்
அளேருகக்கொடி - தூதுளை
அறக்கமாருகமரம் - பெருஞ்செண்பகமரம்
அறக்கப்பாலை - திருநாமப்பாலை
அறக்கமாமரம் - புளிப்புமாமரம்
அறணைச்செடி - காட்டுக்கரணை
அறநெறிக்கொடி - ஊசலாகொடி
அறாமைச்செடி - கவிழ்தும்பை
அறிசனம் - மஞ்சள்
அறிப்பலம் - திப்பிலி
சித்த வைத்திய அகராதி 951 - 1000 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

