சித்த வைத்திய அகராதி 7701 - 7750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7701 - 7750 மூலிகைச் சரக்குகள்


தலையில்லான் - நண்டு
தலைவிரிச்சான்கொடி - பேய்க்குமிட்டிக்கொடி
தவசிமுருங்கைச்செடி - நரிமுருங்கைச்செடி
தவளமிருத்திகை - சுண்ணாம்பு
தவளமிளகு - வெண்மிளகு
தவளோற்பலக்கொடி - வெள்ளாம்பற்கொடி
தவறுகச்செடி - எரிசாலைச்செடி
தவனகம் - மருக்கொழுந்துச்செடி
தவனகிமூலி - எரிபூடுச்செடி
தவிடாதிகமரம் - கொய்யாமரம்
தவிட்டான்மரம் - வெட்பாலைமரம்
தவுசயமரம் - முருங்கைமரம்
தவுட்டைக்கள்ளி - ஐங்கணைக்கள்ளி
தழற்செடி - கொடுவேலிச்செடி
தழுகவப்பூடு - ஒருதலைவெள்ளைப்பூடு
தழுதாழை - வாதமடக்கிச்செடி
தழுவதிக்கொடி - ஓடாங்கொடி
தளகர்த்தாள் - வங்கம், லிங்கம்
தளகாதிகவறுகு - கொடியறுகு
தளப்புச்கூந்தல்மரம் - கூந்தற்பனைமரம்
தளம்பகச்செடி - கச்சாந்தகரைச்செடி
தவளச்செடி - முல்லைச்செடி
தளிகேசமரம் - கிடாநாரத்தைமரம்
தளுதாழைச்செடி - வாதமடக்கிச்செடி
தள்ளுதல் - புணர்ச்சி, சேர்க்கை
தள்ளுநீர் - இந்திரியம், விந்துநீர்
தற்பதிமரம் - கமுகுமரம்
தற்பயக்கொடி - கருஞ்சீந்திற்கொடி
தனப்பால் - முலைப்பால்
தனமுதிற்கோரை - கஞ்சாங்கோரை
தனவனாமரம் - ஆச்சாமரம்
தனவான்மரம் - கொடியரசுமரம்
தனவைச்செடி - சிறுகாஞ்சொறி
தனாபியமரம் - பெருமுன்னைமரம்
தனிகமல்லி - கொத்தமல்லி
தனிகாக்கிமரம் - பெருமூங்கில் மரம்
தனியாச்செடி - கொத்தமல்லிச் செடி
தனியுப்புச்செடி - அமுரிச்செடி
தனிவல்லிச்செடி - குப்பைமேனிச்செடி
தனுகாரம் - படிக்காரம்
தனுகாலக்கொடி - பெரும்புடற்கொடி
தனுசிலை - மனோசிலைப்பாஷாணம்
தனுசோணிதச்செடி - மருளுமத்தைச்செடி
தனுத்திருமமரம் - மூங்கில்மரம்
தனுப்பாஷாணம் - சரகண்டபாஷாணம்
தனுவிருக்கம் - ஆச்சாமரம்
தனைமாவிப்பூலா - வாட்பூராச்செடி
தன்மலோகிதம் - செஞ்சந்தனம்
தன்மவனிதச்செடி - மேகசஞ்சீலிச்செடி
தன்மவைபாதச்செடி - அவுரிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal