சித்த வைத்திய அகராதி 7751 - 7800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7751 - 7800 மூலிகைச் சரக்குகள்


தாகமடக்கி - புளியாரைக்கீரை
தாகமாருதம் - புனம்புளி
தாசி - துருசு
தாசிகாமரம் - கொடிமாதளைமரம்
தாசிசிமரம் - மருதோன்றிமரம்
தாச்சிப்புல் - சோனைப்புல்
தாச்சுகாமரம் - கொன்னைமரம்
தாடகச்செடி - நீர்முள்ளிச்செடி
தாடவியக்கொடி - கும்பச்சுரைக்கொடி
தாடிமஞ்சள் - சருகுமஞ்சள்
தாடிமமரம் - தாதுமாதளைமரம்
தாணிக்காய்மரம் - தான்றிக்காய்மரம்
தாணுகாமரம் - உகாமரம்
தாதகிமரம் - ஆத்திமரம்
தாதனம் - கருக்குருவி
தாதுமாதளை - இனிப்புக்கொடிமாதளை
தாதுமுரிதமரம் - கொடியெலுமிச்சைமரம்
தாதுவிர்த்தியுண்டாக்கு மூலிகைகள் - சிவப்புமுள்ளங்கி,
முள்ளங்கிக்கிழங்கு, வெங்காயம், பேரிச்சங்காய்,
வாதுமைப்பருப்பு, சாலாமிசிரி, நிலப்பனைக்கிழங்கு,
தண்ணீர்விட்டான்கிழங்கு, கசகசா, வெள்ளாட்டுப்பால,
பசுவின்பால், நெய்
தாதைக்கொடி - பேய்க்கொம்மட்டிக்கொடி
தாத்திணிமரம் - நெல்லிமரம்
தாத்திரிப்பாளை - ஆடுதின்னாப்பாளைக்கொடி
தாத்திரிமரம் - நெல்லிமரம்
தாபமாறிமரம் - தான்றிமரம்
தாபரவக்கொடி - கெருடன்கொடி
தாமமரம் - கொன்றைமரம்
தாமமாதிகம் - கொடிமுந்திரி
தாமரசககொடி - தாமரைக்கொடி
தாமரைப்பூக்கொடி - வெண்டாமரைப்பூக்கொடி
தாமலகச்செடி - கீழ்காய்நெல்லிச்செடி
தாமலகாநெல்லி - கொடிநெல்லி
தாமளைமரம் - புன்னைமரம்
தாமிகிநாரத்தை - கொடிநாரத்ததை
தாமிரசிகைச்செடி - அரித்திரசிகைச்செடி
தாமிரபல்லியமரம் - அசோகுமரம்
தாமிரிகைக்கொடி - குன்றிமணிக்கொடி
தாம்பிரகர்ப்பம் - துருசு
தாம்பூரகிமரம் - வாழைமரம்
தாம்பூரிநவ்வல் - கொடிநவ்வல்மரம்
தாம்பூலம் - வெற்றிலை - பாக்கு - சுண்ணம்
தாம்பூலவதனிமரம் - கமுகுமரம்
தாம்பூலவல்லிக்கொடி - வெற்றிலைக்கொடி
தாம்பூலித்துத்தி - கொடித்துத்தி
தாம்பூலியிலை - வெற்றிலை
தாயசரோகணி - பீதரோகிணி
தாயைக்கொன்றான்மரம் - வாழைமரம்
தாயக்கஞ்சிச்செடி - சிவனார்வேம்புச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal