சித்த வைத்திய அகராதி 7951 - 8000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7951 - 8000 மூலிகைச் சரக்குகள்


திராமூலக்கொடி - முடக்கத்தான்கொடி
திராமோதிகமரம் - கிளிமுருக்குமரம்
திராய்ப்பூடு - கம்பந்திராய்ப்பூடு
திராலக்கொடி - வெள்ளரிக்கொடி
திராவிகம் - ஏலம்
திரிகடாகச்செடி - யானைநெருஞ்சிற்கொடி
திரிகடுகு - சுக்கு, மிளகு, திப்பிலி
திரிகண்டக்கொடி - நெருஞ்சிக்கொடி
திரிகத்தச்செடி - பேரா மல்லிச்செடி
திரிகாதோசதப்புல் - தர்ப்பைப்புல்
திரிகைக்கொடி - கொடிமுந்திரிக்கொடி
திரிகோணவுப்பு - சத்தியுப்பு
திரிசமஞ்சரி - துளசிச்செடி
திரிசாகமரம் - வில்வமரம்
திரிசி - கண், நேத்திரம்
திரிதோஷம் - வாதம், பித்தம், சிலேட்டுமம்
திரிபலாதி - கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்
திரிபாதவரிசி - வாலுளுவையரிசி
திரிபுரமொத்தான்செடி - சிவனார்வேம்புச்செடி
திரிபுரமேதிச்செடி - மூக்குத்திக்காய்ச் செடி
திரிபுரவனிதச்செடி - எரிபூடுச்செடி
திரிபுரிக்கொடி - சாரணைக்கொடி
திரிபுரைநீர் - அண்டநீர்
திரிலோகிச்செடி - விஷ்ணுகரந்தைச் செடி
திரிலோகேயமரம் - சீத்தாமரம்
திரிவாதிகமரம் - இனிப்பெலுமிச்சைமரம்
திரிவிடம் - சுக்கு
திரிவிடவேர் - சிவகைவேர்
திருகக்காய் - வலம்புரிக்காய்
திருகுகள்ளி - கிடாக் கொம்புக்கள்ளி
ரிருகுநள்ளிப்பால் - ஐங்காயப்பால்
திருகுக்காய் - இடம்புரிக்காய்
திருகுதாழை - தழுதாழைச்செடி
திருசோபனக்கொடி - வெண்டாமரைக்கொடி
திருடகாண்டமரம் - மூங்கில்மரம்
திருடிமரம் - வள்ளிமரம்
திருட்டவத்திமரம் - சீமையகத்திமரம்
திருணகேதுமரம் - மூங்கில்மரம்
திருணசாதிச்செடி - சீரகச்செடி
திருணசாரைமரம் - வாழைமரம்
திருணசூசிகமரம் - கிளுவைமரம்
திருணசூனியமரம் - தாழைமரம்
திருணராகவமரம் - சுக்குநாறிமரம்
திருணராசமரம் - பனைமரம்
திருணூகாச்செடி - சுடலையாவரைச் செடி
திருத்துளசிச் செடி - துளசிச்செடி
திருநாகவச்செடி - சுவற்றுமுள்ளங்கிச்செடி
திருநாமப்பாலை - ஏழிலைப்பாலைமரம்
திருநீலகண்டச்செடி - சிவகரந்தைச்செடி
திருநீற்றுப்பச்சைச்செடி - உருத்திரசடைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal