5671. என்னவே திரிசூலி பிரணவத்தை
எழிலான சத்துருவின் பாவுக்கல்லோ
சொன்னபடி மந்திரமாம்
வட்சரத்தை சோறாமல் தானுரைத்து வுருவுபோடு
நன்னயமாய் வுருவதும்
ஏதென்றாக்கால் நலமான ஹரிஹரி யென்றேயோது
குன்றான அரனொளி சக்கரத்தை
கொற்றவனே சொரூபமதில் நின்றுஓதே
விளக்கவுரை :
5672. ஓதவே திரு திரு யென்றேயோது
ஒளிவான சக்கரத்தை பின்னுமோது
நீதமுடன் திருபுரையின்
புவனைவாலை நிலையான ஓம்பத்திரகாளி வாவா
தோதமுடன் சத்துரு
சம்மாரிவாவா தோறாமல் ஓம்ஓம் யென்றேயோது
ஆதமுடன் வுன்கையில்
கபாலமேந்தி கண்டகோடாளியென்னே
விளக்கவுரை :
[ads-post]
5673. கோடாலி யென்றதொரு பீஜமோது கொற்றவனே அகோரமென்ற கோரவாவா
தாடாண்மை கொண்டதொரு உக்ர
உக்ர தண்மையுள்ள புகைபுகை தனியேவாவா
பாடான்மை பெற்ற ஜலஜலமேவாவா
பாங்கான கும்பய கும்பய மென்றேயோது
நீடாண்மை ஹணஹண நீயேவாவா
நிகட்சியுடன் தகதக யென்றேயோதே
விளக்கவுரை :
5674. என்றவுடன் பாஷயபாஷய
வென்றேயோது எழிலான அம்இம் குரோம் யென்றேயோது
வென்றிடவே லலி லலி லாங்
கென்றேயோது வேதாந்தத் தாயினது கிருபையாலே
சென்றாடவே லிலி லிலி கிலி
கிலி யென்றேயோது செயலான லுலு லுலு லும்யென்றோது
தென்றிசையாற் பரிபாஷை
குறையாமற்றான் செயலான வட்சரத்தை யோதுவீரே
விளக்கவுரை :
5675. ஓதுவீர் உயிரென்ற
பிரணவந்தான் ஓகோகோ நாதாக்கள் சொல்லமாட்டார்
தீதுபுகழ் அட்சரங்கள்
கூறொண்ணாது தீரமுடன் மம மம வசங்கென்றோது
வாதுகுரி சிவ சிவ
யாமென்றேயோது மகத்தான குரு குரு வாவென்றோது
சூதுபுகழ் ஓம் கிலிம்
கிலியும் வா வா சுந்தரனே பகவதியே சுடரென்றோதே
விளக்கவுரை :

