5676. சுடறான ஓங்குடனே
பாஷாங்குசத்ரி சுத்தமுள்ள சூலிசூலி வா வா வா வா
தடமான சொரூபமதில் நக நக
வென்றோது தாக்கான கலைவகுத்து தகதக வென்றோது
திடமுடனே எகுட எகுட
வட்சரத்தை தீர்க்கமுடன் தலைசுழற்றி மாறுமாறு
சடமுடனே
கும்பகரூம்பகமென்றோது சாங்கமுடன் சுவரலாமென்றோதல் கூறே
விளக்கவுரை :
5677. கூறவே சுசீசுவாலாம்
யென்றேயோது குறிப்பான பிரணவத்தை தலைகீழாய்மாறு
மாறவே பிரதிசுவாலமென்றேயோது
மகத்தான அக்கினிச்சுவாலாவென்று
ஆறவே நரதிர யென்றேயோது
வப்பனே கருவான பீஜமாகும்
மீறவே கோமாங்கிஷ பட்சணியே
வாவா மிக்கான பாஜிபந்துபந்தென்றோதே
விளக்கவுரை :
[ads-post]
5678. பந்தான பந்ததுவும்
குருபீஜமாகும் பாங்கான அகோரகோர வட்சரந்தான்
சிந்தனையில் தானினைக்கு
மாறுமாறு சிறப்புடனே டாட்டேடாட்டே யென்றேயோது
தொந்தமுடன் ஐயுங்கிலியும்
தற்கொவ்வாது சூதான வட்சரந்தான் அதர்வணமேயாகும்
பந்தமுள்ள வட்சரங்கள்
ஒவ்வொன்றுதானும் பாலகனே யொன்றுக்கொன்று உயிருமாமே
விளக்கவுரை :
5679. உயிரான மெழுத்துக்கு
ஒவ்வொன்றுக்கும் வுத்தமனே பஞ்சபூத ஆவியுண்டு
பயிலான வட்சரந்தான் மாமாமாகி
மகத்தான ராம்ராம் ரீம் மென்றோது
பயிலான வட்சரந்தான் ரூம்ரூம்
மாகும் ஆக்குருஷா ஆக்குருஷாயாகும்
ஒயிலான கிலியும்சௌவும்
ஐயம்மாகும் வுத்தமனே பகவதிஓம் மென்றேயோதே
விளக்கவுரை :
5680. ஓம்யென்ற அட்சரந்தான்
சத்துருசங்காரம் ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார்
ஆமென்ற சத்துருவை
மடிமடியென்றோது வப்பனே மசி மசி நசி நசியென்றோது
ஏம்யென்ற வட்சரந்தான் படுபடு
சுவாஹா எழிலான மித்துருவுக் கிதுபோலுண்டு
தீம்யென்ற சுடரான
வட்சரந்தான் தீர்க்கமுடன் மித்துருவிங் குண்டேபாரே
விளக்கவுரை :

