போகர் சப்தகாண்டம் 5681 - 5685 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5681 - 5685 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5681. உண்டான வட்சரத்தால் பகையாளிதம்மை வுத்தமனே ரோகமதை விளைக்கலாகும்
கண்டாலும் விடுவார்கள் புத்திமான்கள் காசினியில் யாரறிவார் இந்தப்போக்கு
திண்டான சாத்திரங்கள் ரிஷிகள் தேவர் தீர்க்கமுடன் இந்நூல்போல் சொன்னாரில்லை
பண்டான பிரணவத்தால் பாரில்மாண்பர் பார்தனிலே மாளுவது திண்ணந்தானே 

விளக்கவுரை :


5682. தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
கோனான மாரணத்தால் மடிந்தோர்தம்மை கொற்றவனே எழுப்புதற்கு மார்க்கஞ்சொல்வேன்
தேனான மனோன்மணியாள் பாதம்போற்றி செப்புவேன் மாணாக்கள் பிழைக்கவென்று
பானான சாத்திரத்தின் யுயிரெழுத்தை பாருலகில் பாடுகிறேன் பண்பாய்த்தானே

விளக்கவுரை :

[ads-post]

5683. பண்பான அதர்வணத்தால் மடிந்தோர்தம்மை பாலகனே விதிப்படியே கொண்டுவந்து
நண்பான மசானமென்ற கரையிலப்பா நாயகனே சடங்கதுபோல் சவத்தைத்தானும்
திண்மையுடன் தானிறுத்தி காவலோடும் தீரமுடன் காளியின்தன் வசியத்தாலே
உண்மையாய் பிரணவத்தை யுச்சாடிக்க வுத்தமனே வுயிரதுவும் வருகும்பாரே

விளக்கவுரை :


5684. பாரென்றால் பிரணவங்கள் ஏதென்றாக்கால் பாங்கான ஹரிஓம் கிலியும் சௌவும்
நேரேதான் அம் மம் இம்மென்றேயோது நெடிதான கும்பகத்தின் அட்சரந்தான்
சீரேதான் சிங்லிங்வங்கென்றேயோது சிறப்பான ரீங்ரீங் ரீங் ராவென்றேயோது
தீரேதான் யௌவும்சௌவும் கிரீமென்றோது தீர்க்கமுடன் பிரணவத்தை யோதுவாயே

விளக்கவுரை :


5685. ஓதவே ரூம் ரூம் லூம்மென்றோது வுத்தமனே லௌவுடனே வெள்வென்றோது
நீதமுடன் ஞௌவுடனே பௌவென்றோது நிலையான லாடகவி பிரணவந்தான்
சாதகமாய் சுடல்காத்தான் மசானங்காத்தான் சாங்கமுடன் ருத்ராவி ருத்ரவீரி
ஆதமுடன் மசானத்தின் எல்லைக்காரி அதிகாரி வரிச்சந்திர பகவான்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar