போகர் சப்தகாண்டம் 6156 - 6160 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6156 - 6160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6156. அன்றான விதியாளி வருவானானால் அவனுக்கே கிட்டுமது மற்றோர்க்கில்லை
குன்றான மலைநாடு தேசந்தன்னில் கொற்றவருஞ் சிவயோகி மாண்பருண்டு
தென்றிசையில் அகஸ்தியனார் மலையிலப்பா தீரமுடன் சென்றுவந்தோர் கோடியுண்டு
வென்றிடவே யவர்களிலுங்கருமியுண்டு வேதாந்த சிவயோகி தானுமுண்டே

விளக்கவுரை :


6157. உண்டான மனோலயத்தை யறிந்துகொண்டு வுத்தமனே நூல்பார்த்த வாதியுண்டு
கண்டாலும் விள்ளாத காணியாளர் கசடகற்றி மனம்பொருந்தி கருத்திலுன்னி
அண்டர்முனி தேவாதி ரிஷிகட்கொப்பாய் வப்பனே முற்பவத்தை யகற்றிவாழும்
சண்டமெனும் மாருதம்போல் பாசம்விட்டு சட்டமுடன் வாழுகின்ற யோகியாமே

விளக்கவுரை :

[ads-post]

6158. யோகியாந் தத்துவத்தில் மிகுந்தவானாய் யோகமெனும் பதிதனக்குகந்த சீஷன்
போகமது தானகற்றி பொதிந்துவாழும் பொங்கமுடன் ஞானமென்ற மாண்பர்கண்டு
ரோகமது இல்லாத புண்ணியவானாய் நொடிக்குள்ளே பகுத்தறிவு கொண்டதீரன்
காகமது நேராத சீஷன்கண்டு சட்டமுடன் உபதேசஞ் செய்குவீரே

விளக்கவுரை :


6159. செய்யவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி வதிதவானே
துய்யதமிழ் பாண்டியனுக் கொப்பதான துரைராஜ சுந்தரனே புகலக்கேளும்
வையகங்கள் தான்புகழும் வனாந்திரத்தில் வண்மையுள்ள சிவந்தகொடி வேலியப்பா
மெய்யான மலைதனிலே மெத்தவுண்டு மேதினியுளோர் காண்பதுவு மரிதுமாமே

விளக்கவுரை :


6160. பாரேதான் மலைதனிலே சுற்றும்போது பாங்கான பாறையின்தன் வெப்புதன்னில்
நேரேதான் விளைந்திருக்கும் சிவந்தமூலி நெடிதான கொடிவேலி யென்னலாகும்
சீரேதான் கொடிவேலி தனையெடுத்து சிறப்புடனே சூதமதை யெடுத்துமைந்தா
வீரேதான் வீரமது களஞ்சிகூட்டி நீதியுடன் மத்தித்து ரவியிற்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar