போகர் சப்தகாண்டம் 6166 - 6170 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6166 - 6170 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6166. கண்டாரே காலாங்கி கிருபையாலே காசினியில் நாதாக்கள் இருக்கும் ஸ்தானம்
தொண்டுமிக செய்தல்லோ மூலிதன்னை தோறாது மனதுவந்து கற்பங்கொள்ள
சண்டமாருதம் போலே மூலிகற்பம் சாங்கமுடன் இருவேளை யுண்டுமல்லோ
வண்டுமூது கோடாது போலவர்ணங்கொண்டு வையகத்தில் வெகுமாண்பர் இருந்தார்தாமே

விளக்கவுரை :


6167. தானான மூலியது கொண்டபோது தாக்கான வாசியது கீழ்நோக்காகும்
கோனான குருநாதர் சொன்னவாக்கு குவலயத்தில் பொய்யாமல் மெய்யென்றெண்ணி
தேனான சிவப்பு சித்தரமாங் கற்பம் தேசமதில் கோடான கோடிபேர்கள்
மானான மலைவளத்தி லிருந்துகொண்டு மார்க்கமுடன் கற்பமது கொண்டிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6168. கற்பமாம் சித்தரமாம் மூலிகற்பம் கனமுடனே வுண்டவர்க்கு வயதேசொல்வேன்
சொற்பமென்று எண்ணாதே துய்யபாலா சொர்ணம்போல் தேகமது மின்னும்பாரு
விற்பனமும் மிகவுண்டாம் அறிவுமுண்டாம் விருத்தமது வாராது பாலன்போலாம்
அற்பமென்று நினையாதே யறியபாலா வாயிரமாம் வருடமது இருக்கலாமே 

விளக்கவுரை :


6169. இருக்கவென்றால் உலகுபதி சித்துதாமும் எழிலுடனே நெடுங்கால மிருந்தசித்து
பொருக்கவே காயாதி கற்பங்கொண்டு பொன்னுலகு பதிதனிலே சேர்ந்தாரப்பா
வருத்தமுடன் வெகுகோடி சித்துதாமும் வளமான மூலிகற்பம் கொண்டுமேதான்
திருக்கவல வீற்றிருக்கு மம்பாள்பாதம் தீர்க்கமுடன் நெடுங்கால மிருந்தார்பாரே

விளக்கவுரை :


6170. பாரேதா னின்னமொரு பண்புசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாக்கியவானே
நேரேதான் உலகுபதி மாண்பரெல்லாம் நெடிதாம மொய்சதனை நுகரும்நேர்மை
தீரேதான் யான்தெய்வம் என்பார்தானும் திரளான சார்வாகம் பொய்யேயாகும்
கூரேதான் கடவுளெனும் மதம்பொய் குவலயத்தில் தேவனில்லை என்பார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar