போகர் சப்தகாண்டம் 6206 - 6210 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6206 - 6210 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6206. கேளேதான் முப்பூவென்ற பூநீர்தன்னை கவனமுடன் பீங்கானிற் பதனம்பண்ணு
நாளேதான் போகாமல் குருமுடிக்கும் நலமாகக் கைபாகஞ் சொல்வேனப்பா
பாளேதான் போகாமல் பூநீர்தன்னை பாங்கான நிலமதனிற் சொல்லக்கேளு
ஆளேதான் பூநீர்களெடுத்தபூமி வதிலிருக்கும் மர்மமதை யறைவேன்பாரே

விளக்கவுரை :


6207. பாரேதான் வோராளு மட்டமாக பான்மையுடன் குழியதுதான் தோண்டும்போது
நேரேதான் பிரமமென்ற கல்தானப்பா நேர்மையுடன் தானிருக்கும் நிகலக்கேளு
தீரேதான் பிரமமென்ற சுக்கான்கல்லை தீரமுடன் தானெடுத்து சொல்லக்கேளு
சேரேதான் கல்லதனைப் பதனம்பண்ணு செயலான பாக்கியமும் அனேகமுண்டே

விளக்கவுரை :

[ads-post]

6208. உண்டான யின்னமொரு மர்மஞ்சொல்வேன் வுத்தமனே முப்பூவின் மார்க்கமப்பா
திண்டான கல்லுப்பு வேணமட்டும் திரமுடனே தானெடுத்து புகலக்கேளும்
வண்மையுடன் கல்லுப்பைப் பதனம்பண்ண வாகுடனே போகும்வகை வண்மைபாரீர்
வண்பாக மூன்றையுந்தான் முடிப்பதற்கு நலமான மும்மூர்த்தி சொரூபந்தானே

விளக்கவுரை :


6209. தானான பழச்சாறு என்றமார்க்கம் தன்மையுடன் முடிப்பதற்கு பருவஞ்சொல்வேன்
கோனான குருவையென்ற நெல்தானப்பா கொற்றவனே அவிக்காமல் தானெடுத்து
பானான வரிசியது படிதானான்கு பாலகனே தானளந்து வரிசைபாரீர்
மானான புதுப்பாண்டந் தன்னில்தானும் மார்க்கமுடன் தான்சமைக்கும் வகைதான்கேளே

விளக்கவுரை :


6210. வகையான வரிசியது பொங்கியேதான் வண்மையுடன் தானிறக்கி யாரப்போடு
தொகையுடனே மறுபாண்டந் தன்னிலிட்டு தோறாமல் ஜலமதுவும் சோடசந்தான்
முகையுடனே பாணியென்ற தண்ணீர்தன்னை முசியாமல் தான்காய்ச்சி இறக்கிக்கொண்டு
பகையான வாசியென்ற சாரந்தன்னில் பக்குவமாய் நிலம்விட்டு மூடக்கேளே
விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar