போகர் சப்தகாண்டம் 6211 - 6215 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6211 - 6215 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6211. மூடவே ரவியென்ற வெயில்தன்னில் முனையான காடியென்ற பாண்டந்தன்னை
நீடியே நாள்தோறும் அருணன்முன்னில் நிலையான பாண்டமதை வெயிலில்வைத்து
சாடியென்ற பாண்டமதில் ஜலமுந்தானும் தாக்கான ரவியினிலே சுண்டுமட்டும்
கூடியதோர் ஜலமதனைக் காய்ச்சி மைந்தா கொற்றவனே குறைவுக்கு விட்டிடாயே

விளக்கவுரை :


6212. விட்டிடவே நாள்தோறும் குறைவுமட்டும் வீரான காடியென்ற பாண்டந்தன்னில்
கொட்டளவு வெந்நீரை யாறவைத்து குறையாமல் நாள்தோறும் இப்படியேவாரு
சட்டமுடன் பாணடமதை யாறுதிங்கள் சாங்கமுடன் தினந்தோறும் ரவியில்வைத்து
திட்டமுடன் ராக்காலம் பனியில்வைக்க தீர்க்கமுடன் செய்குவது பாகமாமே  

விளக்கவுரை :

[ads-post]

6213. பாகமாங் காடியென்ற பாண்டந்தன்னை பரிதிமுன்னே தினந்தோறும் வைக்கும்போது
நாகமது சீரியதோர் விஷத்தைப்போல நாதாந்த காடிக்குக் காரமேறி
வேகமுள்ள சரக்குக்குக் காலனாச்சு வேகாத சரக்கெல்லாம் வெந்துநீரும்
யூகமுடன் காலாங்கி பாதம்போற்றி வுத்தமனே காடியது வழிசொன்னேனே

விளக்கவுரை :


6214. சொன்னதொரு காடிதன்னை யாறுதிங்கள் துப்புரவாய் ரவிதனிலே வைக்கும்போது
நன்னயமாய் நாதாக்கள் செய்பாகந்தான் நலமான பழச்சாறு என்னலாச்சு
வின்னமது நேராது முப்புமார்க்கம் விள்ளார்கள் சித்துமுனி ரிஷிகள்தேவர்
பன்னவே சாத்திரத்தில் சூட்சமுப்பு பாடவில்லை சித்தர்களும் பாடார்தானே

விளக்கவுரை :


6215. தானான ஆதியென்ற முப்புதன்னை தண்மையுள்ள பதினெண்பேர் சித்துதாமும்
மானான சாத்திரத்தில் சூட்சமாக மார்க்கமுடன் முடிக்கும்வகை சொல்லார்தாமும்
கோனான குருநூலாம் சத்தகாண்டம் கூறினேன் போகரேழாயிரத்தில்
பானான சூட்சமென்ற முப்புதன்னை பாருலகில் மாண்பருக்கு பாடினேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar