போகர் சப்தகாண்டம் 6216 - 6220 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6216 - 6220 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6216. பாடினேன் காடியென்ற பழச்சார் சொன்னேன் பாண்மையுள்ள நாதாக்கள் மறைத்துவிட்டார்
நீடியதோர் சிவமுப்பு யிந்தமுப்பு நீடாழி யுலகமெலாம் இதிலடக்கம்
கூடியதோர் கருவிகரணாதியந்தம் குருவான ஜெயநீர்கள் இதிலடக்கம்
ஆடியதோர் சரக்கு அறுபத்துநான்கு வப்பனே சிவமுப்பால் மடிவுகாணே

விளக்கவுரை :


6217. மடியவே சரக்கு வறுபத்துநான்கும் மார்க்கமுடன் கைபாகஞ்செய்பாகந்தான்
முடியுமே கைபாகந் தவறிட்டாலும் முனையான வைத்தியத்துக் காதியாகும்
அடியான காயகற்ப மிதுவேயாகும் வப்பனே காடியென்ற பழச்சார்தானும்
நெடியான காரமது யேற்றுதற்கு நேர்மையுடன் கைபாகஞ் சொல்லக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

6218. சொல்லவே காடியென்ற மார்க்கந்தன்னை தோறாமல் திராவகமாய் முடிப்பதற்கு
வெல்லவே வாலையென்ற சக்ரவாலை வேகமுடன் தீநீராய் வாங்குதற்கு
புல்லவே காடியென்ற மட்பாண்டத்தில் புகழான வாலையதை மேற்பொதிந்து
சில்லுடனே சீலையது வலுவாய்ச்செய்து தீர்க்கமுடன் வாலுகையாம் அடுப்பிலேற்றே

விளக்கவுரை :


6219. ஏற்றவே தீபதூபந்தான்கொடுத்து எழிலான வாலையென்ற பாண்டத்திற்கு
நாற்றிசையுங் குழலமைத்து சீஸாவைத்து நலமுடனே திராவகத்தை இறக்கிக்கொண்டு
மெற்புறமாம் ஜலமதனைத் தள்ளிநீக்கி மேன்மையுடன் மறுபடியும் ஜலத்தைவாறு
ஆற்கமுடன் மறுபடியும் குழலமைத்து வப்பனே திராவகத்தை வாங்கிடாயே
விளக்கவுரை :


6220. வாங்கியே திராவகத்தை பதனம்பண்ணு வளமான காடியென்ற பழச்சார்தன்னை
தூங்கியே திரியாதே வருண்மைந்தாகேள் துப்புரவாய் குருமுடிக்குந் திராவகந்தான்
ஏங்கியே திராவகத்தை முடியாமற்றான் எழிலான வையகத்து மாண்பரெல்லாம்
சாங்கமுடன் சாத்திரத்தை யுணராமற்றான் சட்டமுடன் பலதுறையாய்ப் போனார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar