போகர் சப்தகாண்டம் 6221 - 6225 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6221 - 6225 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6221. தாமான வழலையது எடுக்கும்பூமி தாக்கான நெடுங்காசி தன்னிலப்பா
பூமான்கள் செல்வதற்கு வளப்பஞ்சொல்வேன் புகழான திண்டிக்கல் பீம்பாறையாகும்
நாமேதான் சொன்னபடி திருபுவனமாகும் நலமான யாவடியார் கோயில்தானும்
வேமேதான் விலாடபுரம் தன்னில்தானும் மிக்கான வயநாடு பூமியாச்சே  

விளக்கவுரை :


6222. ஆச்சப்பா தென்காசி பதியில் தானும் வப்பனே கன்னியா குமரியாகும்
நீச்சான வளையலென்ற குப்பிதன்னை நேர்மையுடன் தான்முடிக்கும் காளாஸ்திரிதானும்
மூச்சுடனே நெடுந்தூரஞ் சென்றாலப்பா முனையான பாளமென்ற கோயம்புத்தூர்
வீச்சுடைய பூமியது பள்ளநாடு வீரான கல்லழகர் நாடுதாமே

விளக்கவுரை :

[ads-post]

6223. நாடான நற்மதா தேசமப்பா நலமான சித்தூரஞ் சிங்கிநாடு
பாடாண்மை கொண்டதொரு சீனதேசம் பாங்கான முப்பூவுக்கிடமேயாகும்
கோடான கோடிமனு மாண்பர்க்கெல்லாம் கொற்றவர்க்கு இந்நாடே வஞ்சிநாடு
தாடாண்மை கொண்டதொரு தேசமப்பா தாரணியில் பூவழலையெடுக்கும்நாடே

விளக்கவுரை :


6224. எடுப்பதற்கு இந்நாடு சிந்துதேசம் எழிலான தேசமெல்லாம் பின்னாடாகும்
கொடுப்பதற்கு சிவயோகி மாண்பருக்கு கோடான கோடிமுறை யிதிலொப்பாகும்
தடுப்பதற்கு யிப்பூமி விட்டாலப்பா தாக்கான பூமிவள தமக்குமில்லை
உடுக்கையென்ற பிரகக்கல் தானுமப்பா வுத்தமனே எடுக்கும் வகை செப்பினேனே

விளக்கவுரை :


6225. செப்பினேன் வழலையது யெடுப்பதற்கும் செயலான காடியது முடிப்பதற்கும்
ஒப்பான முப்பூவின் மார்க்கந்தன்னை ஒழுங்குடனே முடிப்பதற்கு வழிதான்சொன்னேன்
தப்பிதங்கள் இல்லாமல் குருமுடித்தல் தண்மையுள்ள முப்பூவும் முடியும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar