போகர் சப்தகாண்டம் 6241 - 6245 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6241 - 6245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6241. அகலான பாண்டமது தன்னில்வைத்து வப்பனே சீலையது வலுவாய்ச்செய்து
பகலான ரவிதனிலே காயப்போடு பாங்குடனே காய்ந்தபின்பு செப்பக்கேளு
நிகலவே கோழியென்ற புடந்தான்போடு நிஷ்களங்கமாகவல்லோ நீறிப்போகும்
புகலவே பற்பமதை பதனம்பண்ணு புகழான மனோன்மணிக்கு பூசைசெய்யே

விளக்கவுரை :


6242. பூசையாம் மனோன்மணியாள் ஆராதாரம் பொங்கமுடன் தான்செய்து எடுத்துமைந்தா
ஆசையது கொள்ளாது வருண்மைந்தாகேள் வப்பனே சீசாவிற் பதனம்பண்ணு
காசுபணம் தேடுதற்கு உரிமைகேளு கனமான பாஷாணம் பலந்தானொன்று  
மாசுபடா முப்பூவும் பலந்தான்காலாய் மார்க்கமுடன் கல்வமதில் போட்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

6243. போட்டவுடன் சரக்கதுவும் ஒன்றாய்க்கூட்டி பொங்கமுடன் முன்னுரைத்த காடிநீரால்
வாட்டமுடன் தானரைப்பாய் சாமமப்பா வளமான பில்லையது லகுவாய்ச்செய்து
நீட்டமுடன் ரவிதனிலே காய்ந்தபின்பு நீதியுடன் முன்சொன்ன மார்க்கம்போலே
தேட்டமுடன் புடமதுவுங் கோழிபார் தெளிவுடனே போடுவதும் முறைதான்கேளே

விளக்கவுரை :


6244. முறையான புடமதுவும் ஆறிப்பின்பு முனையான பற்பமதை யெடுத்துமைந்தா
நிறைபோடு வணுவளவுங் குறையுமில்லை நீட்டமுடன் பற்பமது பாரமெத்த
குறையாது பாஷாணமென்ன சொல்வேன் குவலயத்தில் சித்துமுனி கூறாவண்ணம்
அறைந்தேனே உலகுபதி மாண்பருக்கு வப்பனே சிவயோக தலத்தில்நில்லே

விளக்கவுரை :


6245. நிற்கையிலே மனோன்மணியாள் மனதுவந்து நிஷ்களங்கமாகவல்லோ வுனக்குமைந்தா
சொற்பமென்ற வாதமது பலிக்கும்பாரு சுந்தரனே வுன்னைப்போல சித்துமுண்டோ
அற்பமென்று நினையாதே துய்யபாலா வருண்மைந்தா முப்பாலே யெல்லாஞ்சித்தி
விற்பனர்கள் கொண்டாடும் இந்தவேதை மேதினியில் சமுசாரிக்கானவாறே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar