போகர் சப்தகாண்டம் 6246 - 6250 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6246 - 6250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6246. வாரான பற்பமது போக்குசொல்வேன் வளமான வெள்ளீயந் தன்னைத்தானும்
கூரான சேரதுதான் ஒன்றேயாகும் குறிப்புடனே தானுருக்கி செப்பக்கேளும்
நீரான பாஷாண பற்பந்தன்னை நீமகனே வராகனிடை காலதாக
சேரோடும் வெள்ளீயம் உருக்கியல்லோ செம்மலுடன் பற்பமதைத் தாக்கிடாயே

விளக்கவுரை :


6247. தாக்குவாய் வெள்ளீயம் பற்பத்தாலே தண்மையுள்ள நீரதுவும் உரிந்துகொள்ளும்
வாக்குடனே காலாங்கி மொழிபொய்யாது வளமையுடன் போகரேழாயிரந்தான்
நோக்கமுடன் நீர்வடிந்து வெள்ளிதன்னை நுணுக்கமுடன் வருமைவருங் காலந்தன்னில்
ஏக்கமது கொள்ளாமல் வெள்ளிதன்னை யெளிதாக சமுசாரி யுண்ணலாமே

விளக்கவுரை :

[ads-post]

6248. உண்ணவென்றால் சாபமதுயாதுமில்லை வுத்தமனே சரக்குவறுபத்துநான்கும்
திண்ணமுடன் இம்முறைபோல் செய்வாயப்பா தீரமுடன் சரக்குவறுபத்துநான்கும்
வண்ணமுடன் நிற்றுதற்கு பிசகோயில்லை வளமான முப்பூவின் சுன்னமப்பா
சுன்னமுடன் முப்பூவின் காரத்தாலே நலமான சரக்கெல்லாம் நீறிப்போமே  

விளக்கவுரை :


6249. நீறுமே சூதமென்ற சரக்குதானும் நீதியுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு
வீறுடனே முப்பூவைச்சரியாய்க்கூட்டி வீரமுடன் முன்சொன்ன காடிதன்னால்
மாறுதலும் நேராமல் பற்பந்தன்னை மார்க்கமுடன் தானரைப்பாய் சூதங்கூட்டி
நூலுடனே கலசமென்ற பாண்டந்தன்னில் துப்புரவாய் சில்லிட்டுச் சீலைசெய்யே

விளக்கவுரை :


6250. சீலையது எழுசீலைவலுவாய்ச்செய்து சிறப்புடனே ரவிதனிலே காயவைத்து
வாலையென்ற எந்திரமாம் புவனவாலை வளமான வாலுகையாம் அடுப்புதன்னில்
காலையது ஜாமமது நாலதாக கருவான சூதமதை எரிப்பாய்நீயும்
மாலையது சூதமதை எடுத்துப்பார்க்க மகத்தான கடுங்கார சுன்னமாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar