போகர் சப்தகாண்டம் 6266 - 6270 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6266 - 6270 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6266. கிட்டுதற்கு பூவழலையெடுக்கவல்லான் கீர்த்தியுடன் நடராஜனருளேவேண்டும்
தொட்டகுறி போலதுபோல் காண்பதற்கு துரைராஜர் குருமுறைகள் வேண்டுமப்பா
பட்டமரம் போல்துளுக்கும் வழலைகாண பராபரியாள் கிருபையது வேண்டுமப்பா
விட்டகுறை யிருந்தாலே லபிக்கும்பாரு விருதாவாய் மாண்டவர்கோடியாமே

விளக்கவுரை :


6267. கோடியா மனுகோடி ராஜமன்னர் குவலயத்தில் வழலையுட மார்க்கந்தன்னால்
நாடியே வழலையது பூர்க்குங்காலம் நலமுடனே கண்டறிய மாளாமற்றான்
ஓடியே யிருமாப்பு வனப்புவாய்ந்து ஓகோகோ மாண்பரெல்லாம் மடிந்தாரப்பா
நீடியதோர் பொருளதுவும் விஷகாலந்தான் நிகட்சியுடன் யெடுப்பதற்கு யில்லைதானே

விளக்கவுரை :

[ads-post]

6268. இல்லையே வெகுபேர்கள் மாண்பரப்பா யெழிலான சாத்திரத்தைப் பாராமற்றான்
அல்லல்படுந் துயரமது வருமையாலே வன்புடனே பூநீரை எடுப்பதற்கு
தொல்லையெனும் சாத்திரத்தை முன்பின்னாக சோராமல் பாடிவைத்தார் சித்தர்யாவும்
கல்லுதெய்வம் பேசுமென்று கையெடுத்து காசினியில் கையுரைத்த காட்சியாமே

விளக்கவுரை :


6269. காட்சியாம் கனகமென்ற பொருளையப்பா காசினியில் வெகுபேர்கள் காண்பதற்கு
தாட்சியில்லா சாத்திரங்கள் கண்டாராய்ந்து தடுமாறி தலைமாறி கலையுமாறி
மாட்சியுடன் கோர்வையென்ற சாத்திரத்தை மார்க்கமுடன் காணாமல் மயங்கினார்கள்
ஆட்சிபந்தம் வெகுநூல்கள் சொன்னாருண்டு வப்பனே குருநூல்தான் பாரார்தானே

விளக்கவுரை :


6270. பாராமல் மாண்பரெல்லாம் பதியுங்கெட்டு பாங்கான சாத்திரத்தின் முறையுங்கெட்டு
நேரேதான் சாத்திரத்தை விட்டகற்றி நேர்மையுடன் மதியூன்றி பாராமற்றான்
பூராயமானதொரு ரிஷிகள்நூலில் புகன்றிட்ட மர்மமதை யறியாமற்றான்
சாராயமானதொரு வஸ்துதன்னை சாங்கமுடன் கற்பமென்று கொண்டிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar