போகர் சப்தகாண்டம் 6261 - 6265 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6261 - 6265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6261. பாரேதான் போகரேழாயிரத்தில் பட்சமுடன் காண்டமது ஏழுதன்னில்
நேரேதான் கடைக்காண்டம் ஏழிலப்பா நெடிதான முப்பூவாம் சூட்சுமப்பூ
சீரேதான் வையகத்து மாண்பருக்கு சிறப்புடனே பாடிவைத்தேன் சூட்சமாக
ஆரோதான் கருவாளி செய்வானப்பா வப்பனே யண்டபிண்ட மறிவான்கேளே

விளக்கவுரை :


6262. கேளேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கெடியான புலிப்பாணி மன்னாகேளு
மீளேதான் பூநீரு எடுப்பதற்கு மீளாமல் வெகுமாண்பர் மாண்டாரப்பா
ஆளேதான் வகையறியா மாண்பரப்பா வப்பனே சாத்திரங்கள் படித்துக்கெட்டு
சூளேதான் சுடுவாதி மாண்பர்கூடி துறைமுகத்தை காணாமல் கெட்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

6263. கெட்டதோர் மாண்பர்களின் சாத்திரவண்ணம் கேடறியார் பாடறியார் பயனுங்காணார்
நட்டதொரு பயிரதனை களைகள்போக்க நாதாந்த சித்துமுனி சொல்லைப்போல
விட்டகுறை இருந்ததொரு மாண்பர்போலே வீணாக வாசைகொண்டு மதியுங்கெட்டு
தொட்டலைந்து பூநீராய் எடுக்காமற்றான் சேர்ந்துருண்டு வெகுபேர்கள் மாண்டார்தானே

விளக்கவுரை :


6264. மடிந்தாரே வையகத்து மாண்பரெல்லாம் மகதேவர் கடவுளது யேமவித்தை
கடிந்ததொரு பொருளறிய மாட்டாமற்றான் காசினியில் வெகுமாண்பர் மாண்டாரப்பா
முடிந்ததொரு சிவானந்தப் பொருளைக்காண மூதுலகில் யாராலுங் கிட்டுமோசொல்
படிந்தபொருள் முப்பூவின் நிதானமார்க்கம் பாருலகில் விதியாளி யறிவான்பாரே

விளக்கவுரை :


6265. விதியான விதியிருந்தால் அதற்குக்கிட்டும் வீணாகக் கருமிகட்குக் கிட்டுமோசொல்
துதியான பராபரமான வஸ்துதன்னை துறைமுறையாய் கண்டறிந்தோன் காண்பான்பாரு
மதியான மூடனுக்கு வாய்க்குமோசொல் மகத்தான ஏமவித்தை பிரம்மவித்தை
கதிகாண எண்ணமது கொண்டபேர்க்கு கைவசமாம் ஏமவித்தை கிட்டும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar