போகர் சப்தகாண்டம் 6256 - 6260 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6256 - 6260 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6256. காணலாம் முப்பூவால் அனந்தம்போக்கு காசினியில் நாதாக்கள் ஆடுங்கூத்து
பூணவே சிவயோகி சித்தருக்கு புகட்டவில்லை இந்தவழி முப்பூ மார்க்கம்
தோணவே கைமுறையாய் எடுத்துபாகம் துப்புரவாய் வையகத்து மாண்பருக்கு
வேணதொரு கருவிகரணாதியந்தம் விருப்பமுடன் பாடிவைத்த நுண்மைதானே

விளக்கவுரை :


6257. பாடினேன் முப்பூவின் வழலைமார்க்கம் பாருலகில் சகலசித்து மாடும்பாரு
நீடியதோர் முப்பூவைக் குன்றிவீதம் நீதியுடன் மண்டலந்தான் கொண்டாயானால்
வாடியதோர் திருமேனி சடலந்தானும் வண்மையுடன் காயாதி கற்பத்தாலே
கூடியதோர் தேகமது சட்டைதள்ளும் குணமான முப்பூவின் காட்சிகேளே

விளக்கவுரை :

[ads-post]

6258. காட்சியாம் முப்பூவைக் கொண்டபேர்க்கு காசினியில் நரைதிரையும் இல்லையப்பா
மாட்சியுடன் நெடுங்கால மிருக்கலாகும் மகத்தான வாசியது மேல்நோக்காது
நீட்சியுடன் பதாம்புயத்தை நண்ணலாகும் நிஷ்களங்கமானதொரு சித்தனாவான்
மீட்சிபெற வையகத்தில் மாண்பரெல்லாம் மேன்மையுடன் எந்நாளும் துதிப்பார்பாரே

விளக்கவுரை :


6259. துதிக்கையிலே சித்துமுனி ரிஷியார்தாமும் துரைராஜ சிவயோகி இவரேயென்பார்
மத்க்கவே எல்லவர்க்கு போகவானாய் மகத்தான காயாதி கற்பத்தாலே
விதித்ததொரு வயததுவும் மேலதாகி மேதினியில் வெகுகாலமிருப்பாயப்பா
ததியான முப்பூவின் கைபாகந்தான் சாற்றவில்லை வெகுகோடி ரிஷிகள்பாரே

விளக்கவுரை :


6260. கோடியாங் காலாங்கி கிருபையாலே கூறினேன் போகரேழாயிரந்தான்
தேடியே பார்த்தாலும் கிட்டாதப்பா தேசத்தில் விட்டகுறை இருந்தால் கிட்டும்
வாடியே யலையாதே மன்னாகேளு மகத்தான போகரேழாயிரந்தான்
பாடியதோர் போகரேழாயிரத்தில் பாங்கான கடைக்காண்டம் முப்பூபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar