போகர் சப்தகாண்டம் 6271 - 6275 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6271 - 6275 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6271. கொண்டாரே லாகிரிகள் அருந்தியல்லோ கோடான கோடிநூல்கள் மறைத்திட்டார்கள்
விண்டதொரு சாத்திரத்தை வினயங்கொண்டு வீண்காலம்போக்கியல்லோ மடிந்திட்டார்கள்
தண்டனையாஞ் சாபமது வுள்ளுமாகி தாரணியில் வெகுபேர்கள் சமைத்திட்டார்கள்
சண்டமாரு போலே சத்தகாண்டம் சாற்றினேன் போகரேழாயிரமுங்காணே

விளக்கவுரை :


6272. காணவே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
தோணவே பூநீரை யெடுக்கும்போது சுந்தரனே யுந்தனுக்கு பயமுண்டாகும்
வேணதொரு சித்துமுனி ரிஷிகள்தாமும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
பூணவே வேஷமது மாறாமல்கொண்டு புகழான முன்னிற்பார் பிரம்மைபாரே

விளக்கவுரை :

[ads-post]

6273. பாரேதான் வேஷமது பூண்டுகொண்டு பாங்கான கபாலமது ஏந்திக்கொண்டு
நேரேதான் முன்னாக வந்துநின்று நேர்மையுடன் ஆங்கார கெர்ச்சிப்போடும்
ஆரோதான் பூநீரை எடுக்கவல்லான் வாண்பிள்ளை நீதானோவென்று கூறி
தேரோடும் சத்தமனக் கிரிச்சிபோலும் தேற்றமுடன் சத்தமது கேட்கும்பாரே

விளக்கவுரை :


6274. கேட்டுமே சித்துமுனி யசரீர்வாக்கு கெவனமுடன் கேட்டதுவும் உந்தமக்கு
ஆட்களில்லா வனந்தனிலே இந்தவோசை வப்பனே வதிசயங்கள் காணுதென்று
நிட்கமுடன் தலையெடுத்துப் பார்க்கும்போது நிலையான கறுப்பண்ணச்சாமிபோலே
வீட்கமுடன் முன்னிற்கக் கண்டபோது வித்தகனே பயந்தொடுங்கி சாவார்தானே

விளக்கவுரை :


6275. சாவாரே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் சட்டமுடன் ஓமென்றவேஷத்தோடும்
ஆவதுபோல் மகமேரு தன்னைப்போலே கப்பனே ஜடலமது கொண்டுமல்லோ
வேவலுடன் சவுக்கார வழலையாலே வேதாந்தத் தாயினது வருளினாலே
மேமமுடன் நடுக்கமது பலமுண்டாய மேதினியில் வெகுமாண்பர் மடிந்தார்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar