போகர் சப்தகாண்டம் 6276 - 6280 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6276 - 6280 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6276. தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
பானான வையகத்து மாண்பரெல்லாம் பாராமல் பூநீரின் அபாயந்தன்னை
மோனான மௌனமென்ற மதியீனத்தால் மூதுலகில் சாபத்தால் மடிந்தார்தாமே

விளக்கவுரை :


6277. மடிந்தாரே வன்போடுங் கூடியல்லோ மகத்தான மேன்மக்களிருவர்கூடி
துடிந்ததொரு பூநீரையெடுப்பதற்கு துப்புரவாய் மனதுவந்து மாண்பர்தாமும்
விடிந்த தொருநாழிகையில் ஜாமந்தன்னில் விடுபட்டு வனாந்திரத்தில் இருவர்தாமும்
முடிந்ததொரு முப்பூவைக்காண்பதற்கு முயற்சியுடன் பூமிவளஞ்சென்றிட்டாரே 

விளக்கவுரை :

[ads-post]

6278. சென்றாரே வனந்தனிலே இருவர்தாமும் சிறப்புடனே பூநீரையெடுக்கும்போது
அன்றறிந்த கருஞ்சாரைச் சற்பந்தானும் வப்பனே பூநீற்றை எடுக்கவந்த
நின்றிருந்த சிவயோகி மாண்பர்தம்மை நெடுந்தூரந் தான்துரத்தி வருகும்போது
குன்றான மலைபோலே விருட்சமப்பா கூறான விருட்சமதில் ஏறிட்டாரே

விளக்கவுரை :


6279. ஏறினதோர் மாண்பர்தம்மைக் கண்டபோது எழிலான சற்பமது விருட்சந்தன்னில்
சீறியே தான்கண்டு சினந்துமேதான் தீர்க்கமுடன் சிவயோகி இருவர்தம்மை
மீறியே தீண்டுதற்கு விடமுங்கொண்டு மிக்கான மானிடரைக்காணும்போது
தூறியே சிவயோகி இருவர்தாமும் துப்புரவாய் அம்பதனால் எய்திட்டாரே

விளக்கவுரை :


6280. எய்யவே சற்பமதின் சிரசிற்பட்டு எழிலான சற்பமது மடிந்ததங்கே
பையவே சிவயோகி மாண்பர்தாமும் பார்த்துமே சர்ப்பமது மடிந்ததென்று
துய்ய நல்ல விருட்சமதை விட்டிறங்கி தூயதான வடிமட்டும் வருகும்போது
வெய்யதொரு வதிசயங்களென்ன சொல்வேன் வேதாந்தத் தாயினுட மகிமைகேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar