போகர் சப்தகாண்டம் 6291 - 6295 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6291 - 6295 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6291. பார்த்தேனே மூலியது மகிமைதன்னை பாண்மையுடன் பிர்மித்து யேங்கும்போது
தீர்த்தமுடன் மூலியது வளத்திற்றானும் தீர்க்கமுடன் சிவமாண்பர் கரத்தைப்பற்றி
நேர்த்தியுடன் மூலியது தன்னைத்தானும் நேரான வனந்தனிலே இருக்கும்நேர்மை
பூர்த்தியுடன் யான்கண்டு திடுக்கிட்டேங்கி புகழாகக் குளிகைகொண்டு வந்திட்டேனே

விளக்கவுரை :


6292. வந்தேனே கல்லாலின் மரத்தின்பேரில் வளமையுடன் குளிகைகொண்டு நிற்கும்போது
அந்தமுள்ள சிவமாண்பர் தன்னைத்தானும் வதிதம்மை சிறப்புடனே தானிழுக்கும்
வண்மைமார்க்கம் தந்திரமாம் மூலியது வசியமூலி தண்மையுடன் மகிமையது கூறுவேனே

விளக்கவுரை :

[ads-post]

6293. கூறுவேன் புலிப்பாணி புனிதவானே குவலயத்தில் சித்துமுனி யாரேனுந்தான்
சீறுகின்ற சர்ப்பத்தின் கற்பமூலி சீருலகில் கண்டவர்கள் எவர்தானுண்டு 
தேறுபுகழ் பதினெண்பேர் நவகோடிதாமும் தேசமதில் வெகுமகிமை பூண்டாரல்லோ
மாறுடைய கூறுஞ்சாரை சர்ப்பமூலி மானிலத்தில் கண்டவர்கள் இல்லைதாமே

விளக்கவுரை :


6294. இல்லையே சித்தர்களும் வணக்கங்கூறார் எழிலான சாத்திரத்தைத் தானுங்காணார்
தொல்லையெனும் வனமூலி விஷத்தைக்காணார் தொட்டதொரு கிட்டிருந்த மூலிகண்டார்
அல்லல்வினை தானறுக்கும் வசியமூலி யவனிதனில் வெகுசித்தர்கண்டாருண்டு
கொல்லிமலை திரிந்தாலும் இந்தமூலி குவலயத்தில் கிட்டாது கிட்டாதன்றே

விளக்கவுரை :


6295. கிட்டாது என்றதொரு மூலிதானும் கீர்த்தியுள்ள சிலமாண்பர் தன்னையல்லோ
எட்டாத பொருள்தேடிப் போனதாலே எழிலான சிவமாண்பர் தானுமங்கே 
சட்டமுடன் பணியைநம்பி யுழுதவர்போல் சாங்கமுடன் மூலியது வினயமாச்சு
விட்டகுறை யிருந்ததனால் வாய்க்கும்பாரு விண்ணாடர் மண்ணாடர் காணார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar