போகர் சப்தகாண்டம் 6296 - 6300 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6296 - 6300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6296. தானான பதாம்புயத்தைக் கண்டாலல்லோ தாக்கான வசியமூலி வாய்க்கும்பாரு
மானான சிவமாண்பர் மூலிகொண்டு மகத்தான கானகத்தே செல்லும்போது  
பானான பாம்பதுதான் சென்றபாதை பாங்கான படும்பாதை யென்றேயெண்ணி
கோனான குருதனையே மனதிலுன்னி கொற்றவனார் மோசமென்று நினைத்திட்டாரே

விளக்கவுரை :


6297. மோசமது வந்ததென்று மனதிலெண்ணி முனையான சிவமாண்பர் யேதுசெய்தார்
பாசமுடன் கைதனிலே இருந்தமூலி பட்சமுடன் பூமிதனில் உதறிட்டாரே
நாகமது கொண்டதொரு மூலிதானும் நற்கமல கரந்தனிலே வீழாமற்றானும்
வீசலுடன் மூலியது கரத்தைப்பற்றி விருப்பமுடன் கானகத்தில் விழுகலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6298. ஆச்சப்பா மூலியது இழுக்கும்போது வப்பனே கூடிருந்த தோழன்தானும்
மூச்சுடனே யவர்கரத்தை யிவருங்கூடி முனையாகத் தானிழுக்கப் பார்த்தேன்யானும்
கூச்சலுடன் இருவருமே குய்யோவென்று கூர்மையுடன் மனதுவந்து எண்ணங்கொண்டு
பாச்சலுடன் கரமிருந்த வாளால்தாமும் பான்மையுடன் கரமதனை துணித்தார்பாரே

விளக்கவுரை :


6299. பாரேதான் கரமதுவுந் துணிந்தபோது பாங்குடனே மூலியுடன் கானகத்தில்
நேரேதான் கரந்தனையே மூலிதானும் நேர்மையுடன் தானிழுத்து போகக்கண்டேன்
சீரான சிவமாண்பர் இருவர்தாமும் சிறப்புடனே மறுபடியும் பதிதிரும்பி
கூரான பூவழலை காய்க்கு மார்க்கம் குறிப்புடனே வந்துமல்லோ யமர்ந்திட்டாரே

விளக்கவுரை :


6300. அமர்ந்தாரே சிவமாண்பர் இருவர்தாமும் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
சமர்ந்ததொரு வருட்சமதில் யீன்னுமாண்பர் சுந்தரனே மறுபடியும் யேங்கிவந்து
சமர்த்துடனே பூவழலையெடுப்பதற்கு சட்டமுடன் குருசொன்னநீதிபோல
தமர்ந்திடா வண்ணமுடன் புனிதவான்கள் சட்டமுடன் தானெடுத்தார் புண்யராமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar