போகர் சப்தகாண்டம் 6301 - 6305 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6301 - 6305 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6301. புண்ணியராம் புலிப்பாணி மைந்தாகேளு புகழான சிவமாண்பர் கரத்தையல்லோ
வண்ணமுடன் சர்ப்பமது மனதுவந்து வளமையுடன் தன்தேவர் குருநாதர்க்கு
திண்ணமுடன் கரந்தனையே காட்டவென்று தீர்க்கமுடன் வாய்தனிலே கவ்வியல்லோ
எண்ணறிய நற்பொருளே யெந்தன்நாதா எழிலான கானகத்தின் வளமைகேளே

விளக்கவுரை :


6302. கேட்கவென்றால் அடியேனுங் கானகத்தில் கீர்த்தியுடன் பெண்ணய்தானிருந்தோம்
மீட்கமுடன் இரைதேடி போகும்போது மிக்கான கானகத்தில் யாம்திரிந்தோம்
சூட்சமுடன் பாலையென்ற வனத்தில் நாங்கள் சுந்தரமே சித்தொளிவே போகும்போது
ஆட்கள்விட்டு ஒருவரையும் பிரிந்துமல்லோ வையனே கல்லால மரங்கண்டோமே

விளக்கவுரை :

[ads-post]

6303. கண்டோமே சிவசித்து மாண்பர்தம்மை கைலாசநாதரைப்போல் வேஷங்கொண்டு
உண்டான பொருள்தேடி கற்பமுண்ண உத்தமரே இருவர்தம்மைக்கண்டேன்யானும்
விட்டதொரு வழலையென்ற முப்பூதன்னை விருப்பமுடன் எடுக்கவந்த மாண்பர்தம்மை
சண்டமாருதம்போல துரத்தியானும் சாங்கமுடன் சீறலது சீறினேனே

விளக்கவுரை :


6304. சீறியே யோடுகையில் மாண்பர்தாமும் சிறப்பான கல்லாலின் மரத்தின்பேரில்
மீழியே எனைக்கண்டு பயந்தொடுங்கி மீளாத மரத்தின்மேல் ஏறிநின்றார்
வீரியமாய் அப்பாலே எந்தனைத்தான் விட்டல்லோ கொண்டுமே சிதைத்துப் போட்டார்
கீரியென்னும் விஷமூலி தன்னைத்தானும் கிருபையுடன் எந்தனுக்குக் கொடுக்கலாச்சே

விளக்கவுரை :


6305. கொடுக்கவே என்சேனை பிணையிலொன்று கொப்பெனவே நானிறந்த பாவனத்தை
அடுத்துமே கண்டல்லோ வாலோசித்து ஐயனே குருமூலி தேடிவந்து
அடுத்திருந்த எந்தன்முன் வந்துநின்று பாங்கான மூலிதனை முகத்தில்வைக்க
நடுத்தலையில் வில்லறுந்த நாணிபோலே நாதனே உயிர்கொண்டு வந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar