போகர் சப்தகாண்டம் 6306 - 6310 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6306 - 6310 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6306. வந்தேனே என்பிணையுங் கூடியல்லோ வளமான மரம்விட்டு வந்தபோது
சிந்தனையாய் மூலிதனைவிட்டகற்றி சீறியே நாமிருவர் வந்தபின்பு 
பந்தமுள்ள சிவமாண்பர் இருவர்தாமும் பட்சமுடன் கல்லாலின் மரத்தைவிட்டு
சந்தோஷமாகியல்லோ இறங்கிமாண்பர் சட்டமுடன் மூலிதனைத் தொட்டிட்டாரே

விளக்கவுரை :


6307. தொட்டிட்ட மூலியது எந்தன்நாதா துடர்ந்துமே கைதனையே பற்றியல்லோ
விட்டு விடாதவர்கரத்தை பிடித்துமல்லோ வீறான நாமிருக்குங் கானகத்தில்
சட்டமுடன் கரந்தனையே பற்றியல்லோ சாங்கமுடன் தானிருக்குங் காலந்தன்னில்
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வீரமுடன் விரல்தனை துண்டிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6308. துண்டிடவே கரமதுவும் எந்தன்பக்கல் துப்புரவாய் விஷமூலி வேகத்தாலே
கண்டிதமாய் அவர்செய்த பாவத்தாலே கர்த்தாவே கரமதுவும் வந்துதென்று
திண்டிரை சூழ்வையகத்தில் சமாதிபூண்ட திரளான வெந்தன்குரு தீர்க்கநாதா
கொண்டுவந்தேன் உந்தமக்கு சாட்சியாக கொற்றவனே கதியென்ன யென்னலாச்சே

விளக்கவுரை :


6309. யாச்சென்று சொல்லுகையில் ரிஷியார்தாமும் அங்ஙனவே சர்ப்பமதுக் கோதுவார்பார்
மூச்சடங்கி இருந்ததொரு சர்ப்பந்தன்னை முசியாமல் உயிர்மூலி தான்கொடுத்து
பாச்சலுடன் கானகத்தில் பின்னுமல்லோ பட்சமுடன் இருபேரும் வந்திட்டார்கள்
ஆச்சரிய மானதொரு விஷமூலி தன்னால் வப்பனே பிழைத்ததுவும் அருமைதானே

விளக்கவுரை :


6310. தஅனான சர்க்குருவின் கடாட்சத்தாலும் தாக்கான மனோன்மணியாள் கிருபையாலும்
கோனான மகதேவர் கிருபையாலும் கூர்மையுடன் பிழைத்ததுவும் புண்ணியந்தான்
தேனான சிவமாண்பர் கரமறிந்து தீர்க்கமுடன் வந்ததுவும் பாவமாச்சு
மானான பாவத்துக் கிடங்கொடாமல் மகத்தான சாபமதை நீக்குவீரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar