போகர் சப்தகாண்டம் 2996 - 3000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2996. தருணமுடன் சித்தாதி சித்தரெல்லாம் வளமையுடன் அவர்தமக்கு வணக்கம்சொல்வார்
கருணையுடன் அவர்பாதம் தொழுதுநிற்பார் காவலுடன் சித்தர்களும் சமாதிபக்கம்
தருணமது சமாதிக்கு முன்னதாக தாழ்மையுடன் காத்திருந்த சித்துதாமே

விளக்கவுரை :


2997. சித்தான காலாங்கி கிருபையாலே சென்றேனே குளிகையது பூண்டுகொண்டு
சத்தான லோகமெல்லாஞ் சுத்திவந்தேன் சாங்கமுடன் காணாத காட்சியெல்லாம்
முத்தான காண்டமது மூன்றுக்குள்ளே முடிவுபெற பாடிவைத்தேன் லோகமார்க்கம்
நித்தமுமே காலாங்கி யாமுந்தானும் நிதந்தோறும் பூசையிலே நினைக்கின்றேனே

விளக்கவுரை :

[ads-post]

2998. நினைக்கையிலே காரியங்கள் எல்லாஞ்சித்தி நீணிலத்தில் அவர்போலுஞ் சித்துமுண்டோ
வனைதோறும் காலாங்கி நூலைப்பார்த்து மார்க்கமுடன் வர்ச்சித்தே பூசிப்பார்கள்
சினத்தவரு முதலாவார் காலாங்கிதம்மால் சீருலகில் கீர்த்தியுடன் வாழலாகும்
வினைப்பயனும் விட்டுமல்லோ புண்ணியனாவாய் வேதாந்தத் தாயினது வருளுமுண்டே

விளக்கவுரை :


2999. அருளான செல்வமுண்டு கியானமுண்டு அப்பனே குருசம்பிரதாயமுண்டு 
பொருளுண்டு புகழுண்டு போகமுண்டு பொன்னுலகப்பதி தனிலேயிடமுமுண்டு
இருளகன்று சூரியன்போல் விலாசமுண்டு எழிலான அஷ்டவிதபாக்கியமுண்டு
மருளகன்று வைகுண்டபதி என்னாளும் வாழ்வுண்டாய் வாழ்த்துமல்லோ இருப்பார்முற்றே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2991 - 2995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2991. பாரேதான் சீஷவர்க்கம் கேட்கும்போது பலபலவாம் துறையோடு முறைமையெல்லாம்
நேரேதான் குருவான கமலர்தாமும் நேர்மையுடன் சமாதிக்குள் செல்லுமுன்னே
கூரேதான் அவரவர்க்கு தக்கபாகம் குறிப்புடனே தாம்கொடுத்தார் கமலர்தாமும்
ஆரேதான் சீஷவர்க்கமான போக்கு உகமையுடன் ஞானோப மோதிட்டாரே

விளக்கவுரை :


2992. ஓதவே யுகங்கோடி காலந்தானும் வுத்தமனும் சமாதிதனில் இருந்தாரங்கே
நீதமுடன் சமாதிக்கு பூசைமார்க்கம் நேர்மையுடன் நாள்தோறும் செய்திருந்தார்
காதமெனும் சீனபதிமூன்று காதம் கமலமுனிதன்னை யவர்மாந்தரெல்லாம்
வேதமுடன் சிவபூசை மார்க்கத்தோடு வேள்விகளு மனேகமதாய் நடத்துவாரே

விளக்கவுரை :

[ads-post]

2993. நடத்துகையில் சீனபதி சென்றபோது நாதாந்த காலாங்கி நாதர்தம்மை
திடத்துடனே குருதனையே காணவென்று தீரமுடன் சமாதிக்கு சென்றேன்யானும்
மடபதியா மாயிரம்பேர் சீஷவர்க்கம் மகத்தான குருதனையே காணவென்று
வடகோடி கானகத்தில் மாந்தரெல்லாம் வளமுடனே சமாதிபக்க லிருந்தார்காணே

விளக்கவுரை :


2994. காணவென்றால் அவர்பெருமை யாருக்குண்டு காசினியில் இவரல்லால் ஒருவர்க்குண்டோ
வேணபடி மகிமையது யாருக்குண்டு வேதாந்த காலாங்கிநாதர்க்குண்டு
நீணமுடன் சமாதிதனைக் காணவென்று நேர்மையுடன் அங்கிருந்தேன் சிலதுகாலம்
தோணவே எனதையர் காலாங்கிக்கு சோடசமாம் உபசாரம் சொல்லொணாதே

விளக்கவுரை :


2995. சொல்லவென்றால் ராஜாதிராசர்கில்லை சூரியாதி சந்திராதி யவருக்கில்லை
வெல்லவென்றால் இவர்போலும் சித்துமுண்டோ மேதினியில் கண்டதில்லை சமாதிசித்து
புல்லவே திரியாமல் பூசைமார்க்கம் போற்றவார் காலாங்கி தம்மைத்தானும்
அல்லவே யவர்கிருபை வேண்டுமென்று வனேகமாம் கோடிப்பேர் வருணிப்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2986 - 2990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2986. பத்தான ஏழாங்கால் தன்னிலப்பா பாகமுடன் மூவைந்து மூண்டதாக
சித்தான எட்டாங்கால் தன்னில்தானும் சிறப்புடனே பஞ்சதசமாண்டு தானும்
கத்தான சித்தர்களும் தொண்டுசெய்து சூழ்ந்துமே வெகுகோடி காலம்பார்த்து
வத்தான சமாதியிடங்காத்திருந்தார் வாகுடனே கமலமுனி வாக்குகேளே

விளக்கவுரை :


2987. வாக்கான கமலமுனி சித்துதானும் வாகுடனே சமாதிக்குப் போகும்போது
நோக்கமுடன் கமலமுனி சித்துதாமும் நுணுக்கமுடன் தாமறிந்த வித்தையெல்லாம்
பாக்கமுடன் உபதேசம் செய்யவென்று பாண்மையுடன் சித்தர்களை அழைத்துதானும்
சோக்கமுடன் அவர்களிக்க வேண்டுமென்று சுந்தரரை தாமழைத்து கூறினாரே

விளக்கவுரை :

[ads-post]

2988. கூறினார் சீஷர்களே கேளுமெனறார் குவலமுடி மன்னரெல்லாம் என்னைக்காத்தார்
தேரினதோர் சீஷர்களெட்டுபேர்கள் தெளிவுடைய பாலர்களு மாகையாலே 
காரியங்கள் அனனதொருவித்தை மார்க்கம் கருத்துடனே கேளுமென்ன குருவுதாமும்
பாரினிலே இதிகாச வித்தைவிட்டு பாழான வித்தைகளை கேட்டார்தாமே

விளக்கவுரை :


2989. கேட்கையிலே ஒருசீஷன் வசியங்கேட்டான் கேடுள்ள ஒருசீஷன் மோகனமுங்கேட்டான்
நீட்டமுடன் ஒருசீஷன் வாதங்கேட்டான் நினைவான வாதத்தை போதியென்றான்
வாட்டமுடன் ஒருசீஷன் பிரணவத்தைக்கேட்டான் வாகுடனே பிரணவத்தை வுச்சரிக்க
நாட்டமுடன் ஒருசீஷன் ஞானங்கேட்டான் நலமான குளிகையது கேட்டார்தாமே  

விளக்கவுரை :


2990. கேட்டாரே குளிகையது மார்க்கந்தன்னை கெவனமுடன் குளிகையது வேண்டுமென்றான்
பூட்டமுடன் ஒருசீஷன் புன்தங்கேட்டான் புகழான லோகத்தின் வுளவுகேட்டான்
காட்டமென்ற ஒருசீஷன் நிதியுங் கேட்டான் கருவான தயிலத்தின் மறைப்புகேட்டான்
மாட்டிமையாமொரு சீஷன் தவத்தைக்கேட்டான் மார்க்கமுடன் பலபலவாய் கேட்டார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 2981 - 2985 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2981. அச்சென்ற தேகமது நித்யாநித்தம் அப்பனே யாமறிந்த வரைக்குஞ் சொல்வோம்
மூச்சடங்கி எனதையர் காலாங்கிநாதர் மூன்றுயுக கோடிவரை சீனந்தன்னில்
பேச்சொன்று மில்லாமல் சாமாதிதன்னில் பிணம்போல இருந்தாரே சிலதுகாலம்
வாச்சலுடன் வாசிதனையடக்கிக்கொண்டு வையகத்தில் சிலதுநாளா இருந்திட்டாரே

விளக்கவுரை :


2982. இருந்திட்ட் காலாங்கி தம்மைப்போல எழிலான சித்தர்முனி ரிஷிகளெல்லாம்
பொருந்தியே பூவுலகில் வாசிகொண்டு பொன்னுலக நாட்டுக்கு போனார்தாமும்
திருந்தியே ஒருவருந்தான் இருந்ததில்லை சிறப்புடனே வைகுண்டஞ்சேர்ந்தாரங்கே
வருந்தியே அழைத்தாலும் வருவதுண்டோ வருங்காலந் தானிருந்தால் வருகுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2983. தானேதான் இன்னமொரு புராணஞ்சொல்வேன் தாக்கான சீனபதிதன்னில் யானும்
காலான கமலமுனி சமாதிபக்கல் காத்திருந்தேன் வெகுகோடி காலமப்பா  
தேனான கமலமுனி சீஷரென்போர் தேவனிட சமாதியிடங்கண்டேன்யானும்
பானான சமாதிக்கு முன்னதாக பட்சமுடன் தாமிருந்தார் பண்பதாமே

விளக்கவுரை :


2984. பண்பான சீஷவர்க்கந்தன்னைக் கன்டேன் பட்சமுடன் அவரைக்கேள்விகேட்டேன்
திண்பான சீஷர்களும் அதிதஞ்சொன்னார் திகழான வதிதமது என்னவென்றால்
ன்பான முதற்சீஷன் சொன்னமார்க்கம் வாகுடனே வருஷமது கொன்டுசெய்தேன்
கண்பான இரண்டாங்கால் சீஷன்தானும் கனமுடனே மூனாண்டு தொண்டனாமே

விளக்கவுரை :


2985. தொண்டனாம் மூன்றாங்கால் சீஷன்தானும் சோர்வின்றி நாலாண்டு தன்னில்தானும்
விண்டமுடன் நாலாங்கால் சீஷன்தானும் விருப்பமுடன் நாலாவதாண்டுமட்டும்
கண்டிதமாய் ஐந்தாங்கால் சீஷன்தானும் கருத்துடனே வாறாண்டு தன்னில்மட்டும்
அண்டிடவே ஆறாங்கால் சீஷன்தானும் அப்பனே ஐயிரண்டு பத்துமாண்டே

விளக்கவுரை :


Powered by Blogger.