போகர் சப்தகாண்டம் 1031 - 1035 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1031 - 1035 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1031. கண்ணவே துருசுடனே காரமாகும் கடிதான வெடியுப்பு சீனந்தானும்
நண்ணவே யுப்புடனே சாரமாகும் நலமான சரக்கதுதானாராதாரம்
பண்ணவே ஜெயநீராய்செய்துகொண்டு பாங்கான லிங்கத்திற் சுருக்குத்தாக்கு
எண்ணவே ஜெயநீரின் போக்கையாவும் யென்னசொல்வோம் நாதாக்கள் போக்குதானே

விளக்கவுரை :


1032. போக்கான போக்கிதுவே யென்னசொல்வேன் பூட்டினார் மர்மங்களிக்குள்ளாச்சு
தூக்கான வண்டபிண்ட மிதனாலாச்சு துறைகோடி தொந்தங்கள் கோடாகோடி
தாக்கான விதியாளி யறிவானல்லால் தனியான வீணாளனறிவானோதான்
வாக்கான வீணருடன் வாய்பேசாதே வழிவிட்டு வழிபோவான் மடையன்தானே

விளக்கவுரை :

[ads-post]

1033. மடையனாம் நூல்பார்த்தேனென்பான்பாரு மகத்தான ரகசியங்களனேகமுண்டு
இடையனைப்போல் தோள்கொண்டு வாட்டையேத்தி வாடெங்கேயென்று சொன்னதைப்போல
தடையன்றி பலநூல்கையேந்தியேதான் சதாகாலம்வாசித்துப் பலந்தானென்ன
விடையின்றி நுட்பங்கள் அறியார்மாண்பர் வீணிலேவாதிகளாய்த்திரிவார்தாமே

விளக்கவுரை :


1034. திரிந்துமே கும்பல்கும்பலாகக்கூடி திறமுடனே சாஸ்திரத்தின் நுட்பங்காணார்
பரிந்துமே யோகியிடம் சொல்லமாட்டார் பக்குவமாய்த் தொழில்முறையைக் கேட்கமாட்டார்
எரிந்துமே தெரிந்தவர்போல் யாவும்பேசி யெழிலான சாஸ்திரத்தை தாறுமாராய்  
வரிந்துமே தலையேடு காப்பேடுந்தான் வரிசைமுதல் குறிநோக்க மறியார்தாமே

விளக்கவுரை :


1035. நோக்கமாங்கண்போன குருடனுக்குநுணுக்கமாந்தடிகொடுத்த கதையைப்போல
சூசகமாலிங்கமொரு பலமேவாங்கி சுருதிபெற முலைப்பாலில் சுத்திசெய்து
தீக்கமாய்மயமதுவும் பலந்தானொன்று திறமான வெள்ளியது பலந்தானொன்று
பாக்கமாந் தாளகமும் பலந்தானொன்று பளுவான சிங்கியது பலந்தானொன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar