போகர் சப்தகாண்டம் 1036 - 1040 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1036 - 1040 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1036. ஒன்றான வங்கமது பலந்தானொன்று ஓகோகோ துருசுடனே காசுகட்டி
நன்றான அபினியது பலந்தானொன்று நயமான நாகமது பலந்தானொன்று
குன்றாமல் பொடியதுவாய் மைந்தாமைந்தா குமுறவே யெலுமிச்சன் பழச்சாற்றாலே
பன்றாக பாகுபோலரைத்துக்கொண்டு பாங்குபெற லிங்கத்திற் கங்கிபூட்டே

விளக்கவுரை :


1037. பூட்டியே சுண்ணாம்பு சீலைசெய்து புகழ்ச்சியாய்ச் சட்டிக்குள் மணல்தான்றப்பி
வாட்டமாய் மணல்நடுவில் வைத்துமூடி வாகாகத்தானெரிப்பாய்க் கமலம்போல
பூட்டமாய் நாற்சாமம் யெரித்துவாங்கி பொங்கமுடன் சுண்ணாம்புக் கவசம்நீக்கி
நாட்டமுடன் வஜ்ஜிரமாம் குகையில்வைத்து நலமாக வுறுக்கிடவே களங்கமாமே

விளக்கவுரை :

[ads-post]

1038. களங்கான காரசாரலோகந்தன்னை கருவாக வோட்டில்வைத்து வூதிப்பாரு
வளமானவெள்ளியிடை நின்றுமேதான் வாகாக மாற்றதுவுமேழதாகும்
மனமுடனே நாலுக்குத் தங்கஞ்சேர்த்து மாசற்ற புடமடா வன்னிமீறும்
தனமான யோகத்தில் நின்றுகொண்டு சதாநித்தம் மகேஸ்பரியை பூசிப்பாயே

விளக்கவுரை :


1039. பூசிப்பாய் கட்குடத்திலீக்கண்மொய்க்கும் புகழான மும்மலத்தின் தன்மைபோலும்
ஆசிப்பாய் புழுவினால் சூழ்ந்ததேகம் வப்பனே கடைத்தேற் காயகற்பம்
நேசிப்பாய் லிங்கமது பலமேவாங்கி நெடிதான பொடுதலையின்மூலியாலே
மாசிப்பால் தேங்காயின் பிரமாணந்தான் மதிப்பாகக் கவசமது மாட்டிடாயே  

விளக்கவுரை :


1040. மாட்டவே பச்சரிசிதன்னிலேதான் மார்க்கமுடன் பாண்டமதுக்குள்ளேபோட்டு
வாட்டமாய் லிங்கத்தைப் பொதிந்துமூடி வரிசைபெற தான்சமைத்து சாதந்தன்னை
தீட்டமாய் மண்டலமிப்படியேசெய்து திறமாகத் தானருந்தக் காயம்பொன்னாம்
தேட்டமாய் லிங்கமதைத் தேனிலுண்ணு தேகமது கற்றூணாகும்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar