போகர் சப்தகாண்டம் 1041 - 1045 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1041 - 1045 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1041. தானான பிள்ளையழச் சத்தத்கேட்டுத் தயவுடனே பால்கொடுக்குந்தாயைப்போல
வேனான போகரிஷி இரக்கம்வைத்து விருப்பமுடன் தானுரைக்கும் கசாயகற்பம்
பானான தேனதுவும் படிதானெட்டு பாங்காக அளந்துவொரு பாண்டமிட்டு
கோனான மேல்மூடி சீலைசெய்து குறிப்புடனே பூமிக்குள் புதைத்திடாயே

விளக்கவுரை :


1042. புதைத்துமே தீமூட்டி மண்டலந்தான் பொங்கமுடன் தானெரிப்பாய்ச் சதுரமட்டும்
சிதைத்துமே மண்டலமுங் கடந்தபின்பு தெளிவாகத் தேனதுவுங் கட்டிப்போகும்
பதத்துடனே தானெடுத்து காலைமாலை பதராமல் மண்டலந்தான் மூன்றேயாகும்
மிதத்துடனே பலமதுவாய் கொண்டுவந்தால் மிக்கான தேகமிது இறுகலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

1043. ஆச்சப்பா தேகமது கல்தூணாகும் அப்பனே வாசியது மேலேறாது
மூச்சப்பா வாசியது கீழேநோக்க முறுகுடனே தாதுகளும் வலுத்துப்போகும்
பேச்சப்பா யில்லையப்பா பிராணாயாமம் பேரான கும்பகத்திலிருந்துகொண்டு
மாச்சப்பா மாய்கைதனை விட்டொழித்து மகதாதான கேசரத்தில் நின்றுவாடே

விளக்கவுரை :


1044. ஆடையிலே சித்தர்களும் முனிவர்தாமும் அங்ஙனவே யோடிவந்துவதிதங்கேட்பார்
மேடையிலே இருந்துமங்கே வங்கென்றூனு மிக்கதொரு கேள்விக்கு விடையுஞ்சொல்லி
கூடையிலே பிராயணாயந்தன்னிற்சென்று குப்புவாய்ப் படுத்திருந்து பிணம்போற்பேசி
பாடையிலே போறமட்டும் பராபரியையுன்னிப் பதாம்புயத்தை அடைவதுதான் பான்மையாமே

விளக்கவுரை :


1045. பன்மையாய் கடல்தனிலே வீழ்ந்தபேருக்கு பருந்தொப்பங் கைதனிலே கிட்டினாற்போல்
மேன்மையாய் போகரிஷி மனமுவந்து மதினியில் காயாதிகற்பஞ்சொல்வேன்
கான்மையாம் சதவீசி காந்தந்தன்னை களிப்புடனே பலமெடுத்துக் கல்வமிட்டு
வான்மையாய் தாளகமும் விராகனொன்று வாகபாஷாணம் விராகனொன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar