போகர் சப்தகாண்டம் 1046 - 1050 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1046 - 1050 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1046. ஒன்றான கெவுரியது விராகனொன்று ஒளிவான சிங்கியது விராகனொன்று
குன்றான வீரமது விராகனொன்று குறிப்பான பூரமது விராகனொன்று
தன்றான லிங்கமது விராகனொன்று தாங்கான சூடனது விராகனொன்று
பன்றான துரிசியது விராகனொன்று பாங்கான சூதமது விராகனொன்றே

விளக்கவுரை :


1047. சூதமுடன் நாகமது விராகனொன்று சூட்சுமாந் துத்தமது விராகனொன்று
நாதமாங் கெந்தியது விராகனொன்று நலமான காரமது விராகனொன்று
கீதமாங் குடோரியது விராகனொன்று கெடியான சீனமது விராகனொன்று
வேகமாங் கருடக்கால் விராகனொன்று விரைவான கருமாவும் விராகனொன்றே

விளக்கவுரை :

[ads-post]

1048. ஒன்றாக விவையெல்லாங் கல்வமிட்டு உத்தமனே மலைத்தேனில் தன்னிலாட்டும்
குன்றாமல் நாற்சாமமாட்டியேதான் குமுறவே வச்சிமாங் குகையில்வைத்து
பன்றாகச் சீலையதுவலுவாய்ச்செய்து பாங்குடனே ரவிதனிலே காயவைத்து
நன்றாக யுலைமூட்டி மூசைவைத்து நலமாக மூசையது வூதிடாயே

விளக்கவுரை :


1049. ஊதியே வச்சிரமாங் குகையேதன்னை வுடைத்துப்பார் வுத்தமனேயென்னசொல்வேன்
நீதியாங் காந்தமது சத்தேயாகி நிலைத்துதுடா காயத்துக்குயிருமாச்சு
வாதியே கெந்தகமும் ரசமுமூட்டி வரிசைபெற பொற்றலையின் சாற்றினாலே
ஆதியாமுப்பூவில் குருவுஞ்சேர்த்து அப்பனே நாற்சாமமரைத்திடாயே

விளக்கவுரை :


1050. அரைத்துமே காசிபென்ற மேருக்கேத்தி அடவாகமூன்றுநாளெரித்துமேதான்
நிரைத்துமே யாறவிட்டு யெடுத்துப்பாரு நெடிதான செந்தூர குப்பிவைப்பு
பரைத்துமே செந்தூர மண்டலந்தான் பாங்காக கொண்டிடவே காயம்பொன்னாம்
திரைத்துமே நரைதிரையுமற்றுப்போகும் தெளியமே தேகமதுகற்றூணாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar