1816. கூட்டியே வகைவகைக்கு
நாலுசாமம் குறிப்புடனே தானரைப்பாய் மூலியாலே
நீட்டமுடன் வெண்ணெயது
போலேயாட்டி நினைவுடனே வகல்போலே மூசைபண்ணி
வாட்டமுடன் மூசையிலே
பில்லைவைத்து வாகாகமேல்மூசைதான்பொதிந்து
தேட்டமுடன் மாசீலை வலுவாய்ச்
செய்து தெர்ந்துமே ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
1817. போடவே சீலையது காய்ந்தபின்பு பொங்கமுடன் சுண்ணாம்புசீலையேழு
கூடவே சீலையது
வலுவாய்ச்செய்து குமுறவே சட்டிதனில் மணலைக்கொட்டி
நீடவே சட்டிநடுகலசம்வைத்து
நினைவுடனே மேலுமந்த மணலைக்கொட்டி
சூடவே மேற்சட்டி
கவிழ்த்துமூடி துப்புரவாய்ச் சீலையது வலுவாய்ச்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
1818. செய்யவே சீலையது
காய்ந்தபின்பு செம்மையுடன் சட்டிதனை யடுப்பிலேற்றி
முய்யவே வாலுகையின்
மேலேவைத்து முயற்சியுடன் தீபமது கமலமெட்டு
மையவே தீபமது காடோபத்து
நயமுடனே தீபமதுயெரிப்பாயப்பா
பையவே யாறினபின்
னெடுத்துப்பாரு பளிங்கான செந்தூரம் சொல்லொணாதே
விளக்கவுரை :
1819. சொல்லாலே நாவேதுபாவுமேது
சுடரொளிபோல் செந்தூரஞ் சொல்லப்போமோ
வல்லவே வருணனிட
னிறம்போலாகும் வலுவான சூதமது காரமெத்த
மெல்லவே வோடதனைத்திறந்துபாரு
மேலான செந்தூரம்தீதப்போக்கு
புல்லவே முடியாது
சித்தர்தாமும் புகலார்கள் லொகத்து மாந்தர்தாமே
விளக்கவுரை :
1820. ஆமேதான் செந்தூரம்
பதனம்பண்ணு அப்பனே நாதாக்கள் காண்பாராகில்
போமேதான்
விடுவாரேசெந்தூரத்தை போக்கோடே கொடுபோகும் வழியைப்பார்ப்பார்
நாமேதா னுந்தமக்குச்
சொன்னோமப்பா நாட்டிலே யாரேனுஞ் சொல்வாருண்டோ
வேமேதான் செந்தூரங்
குன்றியுண்ணு வெகுகோடி காலவரையிருக்கலாமே
விளக்கவுரை :