போகர் சப்தகாண்டம் 1811 - 1815 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1811 - 1815 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1811. பாரேதா னின்னமொரு மாற்றங்கேளு பாங்கான சூதமது சேர்தானொன்று
சீரேதான் நாகமதுசேர்தான்பாதி சிறப்புடனே யூகமதா யொன்றாய்கூட்டி
நேரேதான் வட்டோட்டில் பில்லையூத்து நேர்ப்பாக பில்லைக்கு சுறுக்குதாக்கு
ஆரேதானாதாரச் சரக்காலப்பனே ஜெயநீர்தான் செய்துகொள்ளே

விளக்கவுரை :


1812. கொள்ளவே ஜெயநீரை சுருக்குதாக்கு முணமுடனே சூதமது யிருக்கிக்காட்டும்
விள்ளவே கிண்ணமது சாற்றக்கேளும் வேடிக்கை சிமிட்டுவித்தை வாதம்பாரு
மெள்ளவே சரக்குவகை யாமுரைப்போம் மேதினியிலார்செய்தா ரிந்தபாகம்
துள்ளவே மிருதாரு சிங்கிதானும் துறையான துருசுடனே காரமாமே

விளக்கவுரை :

[ads-post]

1813. காரமாம் வீரமுடன் பூரமாகும் கருவான சீனமுடன் பாஷாணந்தான்
தாரமாங் கெந்தியுடன் லிங்கந்தானும் தாக்கான சூடனுடன் கெவுரிதானும்
காரமாம் காந்தமுடன் காடிக்காரம் கடிதான சாரமுடன் பூநீராகும்  
தீரமாய்ப் பவளத்தின் புத்துமாகும் திறமான சலாசத்து பலந்தான்தூக்கே

விளக்கவுரை :


1814. தூக்கவே சரக்கெல்லாஞ் சமனதாக துறையோடும் முறையோடும் மொக்கச்சேர்த்து
நோக்கவே குழியம்மி தன்னிலாட்டி நுட்பமுடன் பழச்சாற்றில் நாலுசாமம்
தாக்கவே தானரைப்பாய் குமரிச்சாற்றால் தப்பஅது தானரைப்பாய் கையான்சாற்றால்
வூக்கமாய் வகைவகைக்கு நாலுசாமம் வுத்தமனே தானரைப்பாய் மூலியாமே

விளக்கவுரை :


1815. மூலியாம் கவுதும்பை சாறுதானும் முயலான முசல்க்காது சாறுதானும்
நீலியாம் அவிரிடச்சாறுதானும் நேரான வரமுள்ளிச்சாறுதானும் 
பாலியாம் குடசப்பால் மூலிதானும் பாங்கான துளசியிடமூலிதானும்
வேலியா முத்தாமணிச் சாறுநாழி வெளியான கள்ளிச்சார் தானுங்கூட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar