1806. கண்டபடி கருத்துடைய
சித்தர்தாமும் காசினியில் செய்தவருங் கண்டோரில்லை
கண்டபடி காத்தாடி
சூட்சாசூட்சம் கயிர்நிற்கும் வழியறியார் துறையுங்காணார்
கண்டபடி கருவூரார்
செய்துபார்த்தார் கருத்திலே யவர்தனக்கு தோன்றவில்லை
கண்டபடி யெந்தனுட புத்தியாலே
காத்தாடி யான்முடித்தேன் அவனியோர்க்கே
விளக்கவுரை :
1807. முடித்தேனே
சீனமென்றபதியில்தானும் முனையான காத்தாடி யடிவாரத்தில்
படித்தளமாம் தோணியது
மிகபோல்கட்டி பாங்கான மாளிகைபோல் தானமைத்து
குடித்தனமாஞ் ஜனங்கள்
பதினாயிரம்பேர் குடையடியில் தானேத்திக் கொண்டுசென்று
நடிப்புடனே
தேவாதிதேவர்தானும் நாணமுற்று பார்த்திடவே நடத்தினேனே
விளக்கவுரை :
[ads-post]
1808. நடத்தினேன்
சீனபதிஜனங்களெல்லாம் நலமுடனே காத்தாடி தன்னிற்கொண்டு
திடத்துடனே
சீனபதிமூன்றுகாதம் திறமையுடன் சுத்திவந்தேன் சித்தர்மெச்ச
வடத்திடமாய் சூத்திரக்
கயிர்திரட்டி வாகுடனே சீனபதியிறக்கிவிட்டேன்
தடத்துடனே
சீனபதிஜனங்களெல்லாஞ் சந்தோஷித்தென்பேரி லன்புற்றாரே
விளக்கவுரை :
1809. அன்புற்றார் கமலமுனி சேதிகேட்டு அப்பனே போகரிஷிசொல்லக்கேளும்
வன்புற்ற
யிதிகாசவித்தையெல்லாம் வளமுடனே காட்டிவிட்டால் பூலோகத்தில்
இன்புற்று யாரொருவர்
மதிக்கப்போறார் யேகவெளியாகிவிடும் மன்னாகேளு
துன்புற்று யெந்தனையும்
சபிப்பாரப்பா சூட்சாதி சூட்சமதை வெளிக்காட்டாதே
விளக்கவுரை :
1810. காட்டினால் லோகமெல்லாஞ்
சித்தாய்ப்போகும் கசடருக்குக் காட்டாதே கருணைபோகும்
தாட்டிகமாய் நல்லோருக்கு
கருவிகாட்டு தயையுடனே யுபதேசம் யாவுங்கூறும்
நோட்டமுடன்
முழுமக்களொன்றாய்க்கூட்டி நொடிப்பார்கள் பகடிமெத்தக் கூறுவார்கள்
தாட்டியுடன் புலவோர்க்கு
புத்திகூறு சதாகாலம் தானினைப்பார் புத்திபாரே
விளக்கவுரை :