1801. இரண்டான பக்கவட்ட
மூன்றேயாகும்மெழிலான நெடுவட்டம் நாலேயாகும்
மிரண்டான வெளிவட்டம்
சக்கரம்போல் மூலத்தின் வுள்வட்டம் கமலமாகும்
திரண்டான சுற்றோரம்
கம்பியப்பா திரளான கம்பிகளில் காதுரண்டாம்
உருண்டான நடுக்கம்பில்
சூட்சாதாரம் வுத்தமனே புறவட்டம் வளையமாமே
விளக்கவுரை :
1802. வளைவுடனே ஒவ்வொன்றில்
கொலுசுமாகும் வரிகளிலே காந்தமது சத்தேயாகும்
களையுடனே நாரென்ற
பட்டேயாகும் கம்பிகளில் தையல்களை வோட்டவேண்டும்
துலையான கொலுசுகளில்
குண்டேயாகும் தோராத கயறுகளில் சூட்சமாட்டி
முளையுடனே பூமிதனில்
கயிறைமாட்டி மூர்க்கமுடன் பறக்கையில் கயிறைத்தட்டே
விளக்கவுரை :
[ads-post]
1803. தட்டையிலே
காத்தாடிதான்பறந்து சந்திரனார் மண்டலத்தி னளவுமட்டும்
நெட்டையிலே தான்பறந்து
நின்றுவாடும் நிலையான சூட்சாதி சூட்சத்தாலே
முட்டையிலே வுள்ளிருந்த
கருவைப்போலு மொருகுடனே நின்றாடும் நெடுநேரந்தான்
சட்டையிலே நார்பட்டு
காற்றைக்கொண்டு சடுதியிலே தானெடுக்கும் பான்மைபாரே
விளக்கவுரை :
1804. பான்மையாம் வாயுவது
மேலாதாரம் பற்றுகையில் காத்தாடி மேலேநோக்கும்
வான்மையுடன் நடுக்கம்பி
வட்டந்தன்னில் நயமுடனே சூட்சாதி சூட்சந்தன்னை
மேன்மையுடன் கயிறுமாட்டி
சுருக்கும்போது மெல்லெனவே காத்தாடி இறங்கலாகும்
தான்மையுடன் சுக்கானின்
சூட்சமப்பா தாரணியிலாரறிவார் விசுவர்தானே
விளக்கவுரை :
1805. விசுவனாம் தேவகம்மாளசித்தன்
வேணபடிசெய்துமல்லோ சூட்சங்காண்பான்
பசுவுடனே கண்சேர்ந்த
கதையைப்போல கருத்தறியார் முழுமூடர் காண்பரோதான்
முசருடைய யிரும்பதனில்
காந்தஞ்சேர்த்து முடித்தார்கள் காத்தாடி வினோதவித்தை
நசுருண்டாய் சூட்சாதி சூட்சமார்க்கம்
நாமுரைத்தபடி யாருங்கண்டிடாரே
விளக்கவுரை :