போகர் சப்தகாண்டம் 1796 - 1800 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1796 - 1800 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1796. காணோமே யென்றுமல்லோ கலங்கிநின்றேன் காலாங்கிநாதருட கிருபையாலே
தூணதுபோ லங்கிருந்த விருட்சந்தன்னில் சுடரொளிபோல் ஜோதியது காணலாச்சு
வீணையுடன் வாத்தியங்கள் முழங்கலாச்சு வேதாந்த தாயினது மகிமையப்பா
நாணமுடன் பார்த்துமுனி சித்தரப்பா நடுக்கமுடன் தானடுங்கி பயந்திட்டாரே

விளக்கவுரை :


1797. பயந்திட்ட சித்தர்களை யான்வணங்கி பரிவாகச் சிரங்குவித்து வணக்கஞ்செய்து
நயமுடனே வதிசயங்கள் கேட்கும்போது நாதாந்தத் தாயினது பிரகாசந்தான்
மயமுடனே சத்தியரிச்சந்திரற்கு மகிமையுட னெப்போதும் காட்சியுண்டு
தயவுடனே நிர்வாணி ரூபவாணி சதாகாலங் காட்சியது தருவாள்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1798. தருவாளே மனோன்மணியுந் திரிகாலந்தான் தரணிபதியாளுமரிசந்திரற்கு
குருவான சித்தர்முனி ரிஷிகளப்பா கூறினாரெந்தனுக்கு வண்மைமெத்த
திருவான வார்த்தையது மிகவுங்கேட்டு தீரனாம் ராஜனிட மொழியுங்கேட்டு
மருவான வுபதேசமெல்லாம்பெற்று மாற்கமுடன் சீனபதிக்கேகினேனே

விளக்கவுரை :


1799. ஏகினேன் சீனமென்ற பதிக்குமைந்தா யெழிலான குளிகைகொண்டு பறந்தேனப்பா
பாகமுட னுபதேசம் பெற்றமார்க்கம் பாங்குடனே வெள்ளையென்ற மனிதரப்பா
வாகுடனே நூல்படியே முறையோதித்து வளமைபெற சமாதிக்கு வழியுஞ்சொன்னேன்
வேகுடனே வெகுகால மிருந்தேன்யானும் வேடிக்கைசிமிட்டுவித்தை செய்தேன்தானே

விளக்கவுரை :


1800. தானான பிரம்மகோடி வித்தைசெய்தேன் தாக்கான காத்தாடி வித்தைவித்தை
மானான வித்தையிலு மதீதவித்தை மாணாக்காள் புகலுகின்றேன் மகிமைகேளு
வேனான பட்டமது கெஜமோபத்து வேகமுடன் நீளமது கெஜமோபத்து
பானான வட்டமது நடுவட்டந்தான் பாங்குடனே வுள்வட்ட முழந்தான்ரண்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar