போகர் சப்தகாண்டம் 1791 - 1795 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1791 - 1795 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1791. பார்க்கவே பாலனுமே கால்நடுங்கி பாராளும் ராஜனுக்குப் பதிவுகூற
ஏர்க்கவே முடியாமல் மைந்தாயானும் யெழிலாகக் காலாங்கிசீஷனென்றேன்
தீர்க்கமுட னவர்தானு மென்னைப்பார்த்து திறமுடனே யவரெனக்கு வுரைத்தவாறு
மார்க்கமுட னென்தகப்பன் திருச்சங்குதானும் மகத்தான சமாதியிலே போனார்தாமே

விளக்கவுரை :


1792. போகையிலே காலாங்கி சமாதிதன்னைப் பொங்கமுடன் அவர்போய்க் கண்டதுண்டு
சாகையிலே இடமவர்க்குதெரியும்பாலா சதகோடியுகமதுவும் சென்றுபோச்சு
ஆகையினா லுந்தனுக்கு யானுஞ்சொன்னோ மப்பனே போகரிஷிவன்பதாக
வேகையிலே புறங்காடு சுடுகாடப்பா வெகுகாலம் யானுமல்லோ காத்தேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1793. காத்தேனே மேதினியில் மெய்யொன்றுக்காய் கனமழிந்து காடுறைந்து கடந்துநின்றேன்
நாத்தமுடன் சுடுகாடு காத்திருந்து நலமுடனே பிள்ளமுதல் மனைவிதோத்தேன்
பூத்தமலர் மூச்சுகுண தேவிதன்னை பொற்காசு விசுவாமிக் கடனுக்காக
தோத்தேனே நாடுமுதல் நகரமெல்லாம் தொலைத்தேனே சமுசாரத்தொல்லைதாமே

விளக்கவுரை :


1794. தொல்லைவிட்டு சமாதிக்குள் சென்றேனப்பா தொல்லுலகில் பற்றொன்று யில்லைகண்டீர்
அல்லலெனு மரசாட்சி விட்டுநீங்கி அப்பனே சமாதியிடங் கண்டேனென்றார்
மெல்லவே சதாகாலம் பூமிதன்னில் மேனியிலிருந்தோர்க்கு பலனொன்றில்லை
வெல்லவே பூலோகமாய்கைவிட்டு விருப்பமுடன் சமாதிதனி லிருக்கநன்றே

விளக்கவுரை :


1795. இருக்கவென்ற வார்தஃதையது கேட்டபோது யென்மகனே யென்புத்திலயித்துப்போச்சு
பொருத்துமுடி போகவில்லை பூமியாசை பொன்னுலகம் காண்பதுவே புண்ணியந்தான்
திருத்தமுட னிவ்வுலகி லிருந்துமென்ன திரள்கோடிவித்தைகளுங் கற்றுமென்ன
வருத்தமுடன் குளிகையிட்டுப் பறந்துமென்ன வாகுடனுலகமதி லொன்றுங்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar