போகர் சப்தகாண்டம் 1786 - 1790 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1786 - 1790 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1786. என்னவே யடியேனும் போகர்நாயன் யெழிலாகத்தானுரைத்தேன் யிரக்கம்வைத்து
சொன்னபடி விதிமுறையில் நுணுக்காராய்ந்து சுடரொளியின் காலாங்கி சீஷனென்றும்
நன்னயமாய் ரிஷிமுனிவர் சித்தர்தம்மால் நலமுடனே பலபேரின் வரமும்பெற்றேன்
வன்னமுட னரிச்சந்திரன் சமாதிமார்க்கம் வகையுடனே காணவென்று வழிகேட்டேனே

விளக்கவுரை :


1787. வழிகேட்டேன் துறைகேட்டேன் சமாதிகேட்டேன் வண்மையுட னெந்தனுக்குப் பட்சம்வைத்து
மொழியுடனே காலாங்கி சீஷனென்று முறைகொண்டுவந்ததினால் போகருக்கு
பழியண்டாமென்றல்லோ பயந்தெல்லோரும் பாராளுமரிச்சந்திரன் சமாதிதன்னை
குழியுடனே தானிருக்கும் குகையினுள்ளே கொண்டுபோய் விட்டார்கள் கிங்கிலியர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

1788. விட்டவுடன் போகரும்யான் முன்னேசென்று விரைவுடனே தாள்பணிந்து கரங்குவித்து
பட்டமன்னன் கொலுவினுட சமாதிபக்கம் பாங்குடனே நிற்கையிலே சித்தர்கூட்டம்
திட்டவந்து யென்னையாரென்று கேட்க கீர்த்திபெற்ற காலாங்கிசீஷனென்றேன்
சட்டமுட னென்னையவர்பட்சம்வைத்து சாங்கமுடன் ஆசீர்மஞ்சஎய்தார்தாமே

விளக்கவுரை :


1789. தாமேதா னனேகவித தர்க்கஞ்சொன்னார் தாழ்வாக யானுமல்லோ யெடுத்துரைத்தேன்
போமேதான் சமாதியிடம் செல்கவென்றார் போனேனே ஓங்காரஞ்சத்தங்கேட்டேன்
வாமேதான் வாத்தியங்கள் கோஷ்டம்போல வளமையுடன் வினோதவகை வரிசைகேட்டேன்
நாமேதா னிருக்குமந்த காலந்தன்னில் நலமாக சமாதியது திறக்கலாச்சே

விளக்கவுரை :


1790. திறக்கையிலே சத்தியரிச்சந்திரன்தன் திறலான சமாதியது யென்னசொல்வேன்
சுரங்கமுடன் சுடரொளிபோல் காணலாச்சு சூக்குமமாந் தேகமது மின்னல்போலாம்
இரங்கவே மூன்றுபடி நடந்துபோனேன் இராஜனா மரிச்சந்திர னருகில்சென்றேன்
வரங்கொண்ட வரிச்சந்திர னென்னைப்பார்த்து யாரப்பா வந்தவனீ ரென்றார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar