போகர் சப்தகாண்டம் 1781 - 1785 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1781 - 1785 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1781. புறப்பட்டேன் குளிகைகொண்டு பறந்தேனப்பா பொங்கமுட னயோத்திநகர் வடபாகத்தில்
துறப்புடனே சமாதிபுறம் காணவென்று துப்புரவாய் நதியோரம் போனேன்யானும்
முறப்புடனே கிங்கிலியர் கோடாகோடி மூர்க்கமுடன் காவற்காரங்கிருந்தார்
சிறப்புடனே யடியேனுங் காலாங்கிதன்னை சீர்பாதந் தனைநினைந்து கண்டிட்டேனே

விளக்கவுரை :


1782. கண்டவுடன் கிங்கிலியர் யாரென்றார்கள் காலாங்கிவையருட சீஷனென்று  
தெண்டமுடன் திருச்சங்கு பேரனென்று தீவிரமாய் முறைகொண்டு செய்யலுற்றேன்
மண்டலங்கள் யான்முழுதும் குளிகைபூண்டு மானிலத்தில் சுத்தியல்லோ வரிசைபெற்றேன்
குண்டலங்கள் சரப்பளிகள் பதக்கம்யாவும் குவலயத்திலெனக்களித்து போவென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

1783. என்றார்கள் மனுகோடி சித்தர்கூட்டி யெழிலுடனே ரிஷிகள்முதலாசீர்மித்தார்
குன்றான மலைநதிகள் குகைகள்போனேன் கோடிவரை வெகுகாலமிருந்து பார்த்தேன்
பன்றான சீனபதி தலைமையென்று பாங்குடனே குளிகையது பறந்திட்டேன்யான்
நன்றான கமலமுனி சித்தர்தம்மை நலமுடனே சீனமதில் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


1784. பார்த்தேனே வெள்ளையென்ற மனிதரப்பா பரிவாக பூமியெல்லாங்காரமாகும்
நீர்த்தமுடன் பொய்கையொன்று சுனையொன்றுண்டு திகழான படியோரம் சித்தொன்றுண்டு
ஊர்த்தமுடன் சமாதியிலே யிருந்தாரப்பா வுவமையுட னவர்பாதம் கண்டுவந்தேன்
ஏர்த்தமுடன் வரரிஷியா மவர்பேராகு சமழிலான மார்க்கமெனக் கோதிட்டாரே

விளக்கவுரை :


1785. ஓதவே சிறுபாலன் விடைகள்பெற்று வுகமையுட னனேகவித நூல்கள்பார்த்தேன்
நீதமுடன் வரரிஷியார் நூலில்சொன்ன நுட்பமா மரிச்சந்திரன் சமாதிகாணா
வேதமுத லாராய்ந்துங் காணவில்லை வெளியான வரரிஷியின் நூலில்சொன்னார்
பாதமுடன் சத்தியரிச்சந்திரன் பாதம்புயத்தைக்காண வெனவந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar