போகர் சப்தகாண்டம் 1776 - 1780 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1776 - 1780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1776. பாரென்ற போதையிலே யானடுங்கி பட்சமுடன் பாட்டரையான் பரிவுகேட்டேன்
நேரென்ற சேதியெனக்கு பாட்டரென்றேன் விருப்பம்வைத்து யெந்தனுக்கு ஞானோபித்தார்
சீருடனே யடியேனும் நடுநடுங்கி சிறப்புடனே வுபதேசம்பெற்றுக்கொண்டு
பேருடனே காலாங்கி தனைநினைந்து பேரின்பசாகரத்தை யடைந்திட்டேனே

விளக்கவுரை :


1777. அடைந்தபின்பு குளிகையது பூண்டுகொண்டு அரசனாம்திருசங்கு விடையும்பெற்று
கடந்துமே யயோத்திநகர் தன்னைவிட்டுக் காலாங்கிநாதருட கிருபையாலே
தொடர்ந்துமே சீனபதிக் கேகியானும் துப்புரவாய்க் கமலமுனி பக்கல்சென்றேன்
நடந்ததொரு சங்கிரகம் யானுரைத்தேன் நலமுடனே கமலமுனி மகிழ்ந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

1778. மகிழவே யடியேனும் விடைகள்பெற்று மார்க்கமுடன் வெள்ளையென்ற மனிதர்பக்கம்
நெகிழவே போயிருந்து யாவுஞ்சொன்னேன் நெடிதான கருவிகரணாதியெல்லாம்
மகிழவே முடித்திட்டேன் தலைகீழாகச் சதாகாலம் வெள்ளையென்ற மனிதருக்கு
புகழவே சீனபதியோர்கள் மெச்ச புகட்டினேன் வினோதமென்ற வித்தைதானே  

விளக்கவுரை :


1779. தானான வினோதமென்ற வித்தையப்பா தாரிணியில் செய்தவரும் பார்த்தோரில்லை
கோனான குருவருளால் குளிகைபூண்டு குவலயங்கள் சுற்றியல்லோ முழுதும்பார்த்தேன்
பானான கற்றவித்தை வீண்போகாமல் மாறாமல்சதாகால மென்பேர்கூற
வேனான வித்தைகளை விரும்பியானும் விபரீதமாகவல்லோ விரித்திட்டேனே

விளக்கவுரை :


1780. விரித்துமே சீனபதி தன்னில்யானும் வெகுகாலம் நானிருந்தேன் மைந்தாகேளு
நெரித்துமே மறுபடியும் குளிகைபூண்டு நேரானசீனபதிவிட்டுநீங்கி
புரிந்துமே சத்தியரிச்சந்திரன்தன் பகழான சமாதியிடங்காணவென்று
தெரித்துமே வயோத்திநகர் வடபாகத்தில் திறமுடன் சமாதிகண்டு புறப்பட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar