போகர் சப்தகாண்டம் 1771 - 1775 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1771 - 1775 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1771. விட்டவுட னடியானுந் தாள்பணிந்து விருப்பமுடன் காலாங்கிதனைநினைத்தேன்
கிட்டநின்ற பாலகனுமே சிரங்குவித்து கிருபையுடன் திருச்சங்கைக் காணவென்று
திட்டமுடன் முழங்காலு சமாதியிட்டுத் தீவிரமா யடிதொழுது போற்றிநின்றேன்
சட்டமுடன் சமாதியது தான்திறந்து சடுக்கெனவே சத்தமது கேட்டிட்டேனே

விளக்கவுரை :


1772. கேட்டவுனடியேனுங் கிடுகிடுத்து கிருபையுடன் சாஷ்டாங்கஞ் சமர்ப்பித்தேதான்
வாட்டமுட னெந்தனையாரென்று கேட்க வளமுடனே சிறுபால னுரைக்கலுற்றேன்
பாட்டரென்ற திருச்சங்கு ராஜன்தன்னை பாரினிலே காண்பதற்கு மனமுவந்து
கோட்டமுடன் சமாதியிடம் வந்தேனென்று நுட்பமதாய் போகரிஷிவுரைத்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

1773. உரைத்தேனே யெந்தனிட தீரத்தாலே வுத்தமனே காலாங்கி கடாட்சந்தன்னால்
திறப்புடனே காலாங்கி சீஷனென்றேன் திகழுடனே சீர்பாதங்காணவென்று
மரைப்புடனே குளிகையது பூண்டுகொண்டு மார்க்கமுடன் சீனபதிவிட்டு நீங்கி
விரைப்புடனே சமாதியிடங்கண்டுவந்து விருப்பமுடன் வந்தேனே போகர்தானே

விளக்கவுரை :


1774. தானான போகரென்ற போதேயப்பா தயவுடனே யென்மீதில் பட்சம்வைத்து  
கோனான திருச்சங்கு ராஜன்தானும் கொற்றவனாரெந்தனுக்கு வுபதேசித்தார்
பானான புத்திமதி மிகவுரைத்து பாங்குடனே குளிகைகொண்டு போமிடத்தே
வேனான சித்தர்முனி ரிஷிகள்தாமும் வேணுமென்றே சபித்திடுவார் தப்பிக்கொள்ளே

விளக்கவுரை :


1775. கொள்ளுவது வுந்தனுக்கு புத்திமார்க்கம் கோளாறுநேராமல் சித்தர்முன்னே
எள்ளளவும் பிசகின்றி நடந்துகொள்வாய் என்பேரா வுந்தனுக்கு சாபமில்லை
கள்ளமனமுடையதொரு சித்தரப்பா கண்டாலே வுன்னையுந்தான் சபிப்பார்சித்தர்
உள்ளபடி போலாகவுறவுபேசி ஒருகடிகைநேரமதில் சபிப்பார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar