1766. ஆச்சதினா லெந்தனையு
மனேகம்பேர்கள் அதிசயமாய்க் காணவே வருவார்மாண்பர்
மூச்சடங்கி மூன்றுயுக
மிருந்தேனப்பா முனையான காலாங்கி சீஷன்தானும்
பாச்சலுடன் குளிகையது
பூண்டுகொண்டு பட்சமுடன் வந்ததொரு ஜோதிதன்னால்
காச்சலுடன் மூடிருந்த
சமாதிதானும் கடுகெனவே வெடித்துமல்லோ காணலாச்சே
விளக்கவுரை :
1767. கண்டதினா லுந்தனுக்கு கருணைகூர்ந்து
கடாட்சித்தேன் திருமூலர் பாட்டர்தானும்
விண்டதில்லை யொருவருக்கும்
ரகசியார்த்தம் வேதாந்ததாயினது கடாட்சத்தாலே
மண்டலத்தி லுந்தனுக்கு
வுபதேசித்தேன் மானிலத்தில் குளிகையது பூண்டுகொண்டு
தெண்டமுடன் சித்தர்களை
வணங்கிநீயும் தேசமெலாங் குளிகைகொண்டு திரிவாய்நீயே
விளக்கவுரை :
[ads-post]
1768. திரியென்ற போதையிலே
விடையும்பெற்று திரும்பினேன் சீனபதிகுளிகைபூண்டு
நெரியென்ற சத்தியத்தை
கைவிடாத நேர்ப்பான வெள்ளையென்ற மாந்தர்முன்னே
பரியென்ற
கருவிகரணாதியெல்லாம் பாங்குடனே வுபதேசம் செய்தேன்யானும்
சரியென்று யெந்தனையு
மாசீர்மித்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திட்டாரே
விளக்கவுரை :
1769. செய்தபின்பு வடியேனுஞ்
சீனந்தன்னில் சிறப்புடனே சிலகால மிருந்தேனப்பா
மெய்யுடனே
இன்னம்வெகுதேசங்காண மேதினியில் குளிகையது பூண்டுகொண்டு
கைதவமாய்ச் சீனபதிவிட்டு
நீங்கி காலாங்கிநாதர்பாதம் மனதிலுண்ணி
பையவே யானுமல்லோ பறந்தேனப்பா
பாரினிலே வயோத்திர்கள் கண்டிட்டேனே
விளக்கவுரை :
1770. கண்டேனே திரிச்சங்கு
சமாதிகண்டேன் கடலோரம் போயிரங்கி நின்றேனப்பா
அண்டர்முனி ராட்சதர்கள்
இருக்குங்கூட்டம் அணியணியாய் அவர்பாட்டன் சமாதிகண்டேன்
தண்டுடனே ராட்சதாள்
கூட்டம்பக்கல் தாழ்மையுடன் போயிருந்து தண்டஞ்செய்தேன்
கொண்டென்னை தானனைத்து
ராட்சதாக்கள் கொண்டுபோய் சமாதியிடம் விட்டிட்டாரே
விளக்கவுரை :

