போகர் சப்தகாண்டம் 1761 - 1765 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1761 - 1765 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1761. ஆச்சப்பா சமாதியது வெடிக்கக் கண்டேன் அப்பனே திருமூலர் பாட்டர்கண்டேன்
மூச்சப்பா தானடக்கி பூமிக்குள்ளே மூன்றுயுகந்தானிருந்த சித்துதன்னை
பேச்சப்பா வெகுபேச்சு பேசுதற்கு பீடமுதல் தலைவாசல் முன்னே நின்றேன்
நீச்சப்பா வாசனைகளொன்றுமில்லை நிலையான கற்பமுணட காயமாமே

விளக்கவுரை :


1762. காயமது வாசனைகள் கூறப்போமோ கடும்பச்சை பூரமென்ற வாடைவீசும்
நேயமுள்ள மல்லிகைப்பூ மணம்போலெங்கும் நெருங்கவே வொட்டாது குகையினுள்ளே
சாயமென்ற தேகமது குங்குமம்போல் தரிசிக்க மானிடர்க்கு கிட்டுமோசொல்
மாயமென்ற சித்தொருவர் மகிமைசொல்ல மாளாது வையகத்தில் மாளாதாமே

விளக்கவுரை :

[ads-post]

1763. மாளாத சித்தென்னைக் கண்டபோது மகிதலத்தி லாரப்பா காணவந்தீர்
சூளாத ஜெனமில்லாச் சமாதியுள்ளே சூட்சமுடன்வந்தலுவலென்ன வென்றார்
கோளான வார்த்தைகளும் பேசவேண்டாம் குறிப்புடனே இரண்டொரு வார்த்தைகள் சொல்லி
தாளான சமாதிதனை மூடிப்போடு தரணியள்ள சித்தரெல்லாம் வருவார்தாமே

விளக்கவுரை :


1764. வந்தாரே யாமானால் கேள்விகேட்பார் வளமுடனே யவர்களுக்கு விடைசொல்லவேண்டும்
சிந்தனையை யான்மறந்துபேச வேண்டும் பேசாட்டா லவர்களுக்கு மனநோயுண்டாம்
பாங்கான மூலவர்க்கங் கோடியுண்டு பந்துபந்தாய் வருவார்கள் சமாதியண்டை
தொந்தரவு யெனக்கல்லோ மிகுதியாகும் துரைராஜ சுந்தரனே சமாதிமூடே

விளக்கவுரை :


1765. மூடனென்று சொல்லுகையி லடியேன்தானும் முடிவணங்கி தெண்டனிட்டு கெதியேதென்ன
நாடென்ற பதிதனிலே வாழுஞ்சித்தர் நாமிருக்கு மிடந்தனையே யறியமாட்டார்
மாடென்ற மனிதரப்பா முழுமக்கள்தாமு மடையர்களோ கோடான கோடிபேர்கள்
கூடென்ற கூடுவிட்டுப் பாய்ந்தேனென்று குவலயத்தில் கூக்குரலு மிகவுண்டாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar