போகர் சப்தகாண்டம் 1756 - 1760 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1756 - 1760 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1756. பறந்திட்டார் சீனபதிவிட்டுநீங்கி பாங்குடனே குளிகையது பூண்டுகொண்டு
மறந்திட்ட காலாங்கி தனைநினைத்து மார்க்கமுடன் இரத்தினகிரி மலைமேற்சென்று
துறந்திட்ட சித்தர்களைக் காணவென்று துரைராஜர் வீற்றிருக்கும் பக்கல்சென்று
நிரைந்திட்ட முனிவரிடம் நின்றுபேச நீனிலத்தில் போகரையா ரென்றிட்டாரே

விளக்கவுரை :


1757. என்னவே யடியேனும் தாள்பணிந்தேன் யெழிலான காலாங்கிதனை நினைந்தேன்
சொன்னதோர் சித்தர்கட்கு விடையுஞ் சொன்னேன் சுடரொளியாங் காலாங்கி சீஷனென்றேன்
நன்னயமா யெனையழைத்து குகையிற்சென்று நாதாக்களிருப்பிடமும் காண்பித்தேதான்
பன்னயமாஞ் சித்தர்களின் மரபுசொல்லி பட்சமுடனெந்தனுக்கு வழிசொன்னாரே

விளக்கவுரை :

[ads-post]

1758. வழியுடனே இரத்தினகிரி மேலேசென்றேன் வாகுடனே ரத்தினமென்ற கிரியிற்கண்டேன்
அழியாத வாஸ்தான கோட்டைகண்டேன் அதற்கப்பால் திருமாலின் கோயில்கண்டேன்
குழிபோலக் குகையுடனே புனலொன்றுண்டு கூரானமச்சமுனி சித்தனுண்டு
வழிபோகக் காண்பதற்குத் துரையுமில்லை மகத்தான சித்தர்முனி காவல்தானே   

விளக்கவுரை :


1759. தானான காவலிடம் சென்றுபோனேன் தயவாக யெந்தனையும் கண்டிட்டார்கள்
மானான மச்சமுனி யெங்கேயென்றேன் மகத்தான சித்தர்களும் கொண்டுசென்றார்
வேனான மச்சமுனி கண்டபோது வெகுவெகுவா யெந்தனிடமவர்சொன்னாரே
பானான திருமூலர் பாட்டரெங்கே பார்த்து நெடுநாளாச்சு யென்றிட்டேனே

விளக்கவுரை :


1760. என்றையிலே போகரிஷிசொன்னபோது யெடுத்துரைத்தார் திருமுகங்க ளனேகமுண்டு
நின்றையிலே சமாதியிடங் கொண்டுசென்றார் நிலையான ரத்னகிரி மலையோரந்தான்
நன்மைபெற திருமூலர் பாட்டர்தம்மை நாதாந்த சித்தொளியைக் காணவென்று
தன்மையுட னவர்பாதந் தொழுதுநின்றேன் ஷணத்திலே சமாதியது வெடிப்புண்டாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar