1751. ஓதவே யடியேனுக்
குறுதிசொன்னார் வுத்தமனே போகரிஷி சொல்லக்கேளும்
நீதமுடன் சாஸ்திரங்க
ளெல்லாங்கற்றீர் நிலையான காயத்தை நிறுத்தக்கண்டீர்
தோதமுடன் சித்தருட
குளிகைகொண்டீர் தோராதகீர்த்தியுடன் சீனம்சென்றீர்
பாதமுடன் காலாங்கி
யருளும்பெற்றீர் பட்சமுடன் சித்தருட வரங்கொண்டீரே
விளக்கவுரை :
1752. கொண்டீரே போகரென்ற
பெயருங்கொண்டீர் குவலயத்தில் சித்தருட மகிமைகண்டீர்
அண்டரண்ட சரசரங்க ளனைத்தும்
கண்டீர் ஆகாயபூமிமுத லுளவாராய்ந்தீர்
திண்டமுடன் ராஜாதிராஜர்
சேர்வை திறமுடனே யவர்கள் வைத்தகிடாரங் கண்டீர்
மண்டபங்கள் தடாகமுதல் குகையுங்கண்டீர்
மன்னவர்கள் ராஜ்ஜியங்கள் கண்டீர்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1753. கண்டதினால் கீர்த்தியுண்டு
குற்றமில்லை கைலாசநாதரைப்போல் சித்தரப்பா
மண்டபங்கள் கடலோரம்
ரிஷிகள்தானும் மகாகோடி மகானுக்கள் மிகவுண்டப்பா
தெண்டமுட னுந்தனுக்கு
சாபமீவார் தெளிவாக வவர்களிடஞ் சொல்லவேண்டாம்
அண்டர்முனி போலவரும்
வதீதங்கேட்பார் அப்பனே தாள்பணிந்து வுரைசொல்வீரே
விளக்கவுரை :
1754. சொன்னதினால் சாபமது
கிடமுறாது தொல்லுலகி லுன்னையொரு சித்தரென்பார்
நன்னயங்கள் தாமுரைத்து
நலமும்பேசி நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டாராய்ந்து
வின்னமிலா வரமுடனே
சாபம்நீக்கி வேதாந்த தாயினது வருளும்பெற்று
முன்னமாய்ப் பெரியோர்கள்
வரமும்பெற்று முகைமையுடன் சீர்மவருள் தந்தாரே
விளக்கவுரை :
1755. அருள்பெற்று போகருமே
சீனஞ்சென்று அங்ஙனவே போயிருந்து சிலதுகாலம்
தெருளுடனே வித்தையெல்லாம்
செய்துபார்த்து தேவதைக்கொப்பான மாந்தருக்கு
பொருளுடைய கருவான
வதீதவித்தைப் புகட்டினார் சீனமென்ற மாந்தருக்கு
இருளகல போதித்து போகர்தாமும்
யெப்போதும் போலாகப்பறந்திட்டாரே
விளக்கவுரை :

