போகர் சப்தகாண்டம் 1746 - 1750 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1746 - 1750 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1746. அமர்ந்திட்ட தின்னமொரு மார்க்கங்கேளு அப்பனே குளிகையது பூண்டுகொண்டு
தமர்ந்திட்ட வகஸ்தியனார் மலையைக்கண்டேன் தாக்கான மலையோரம் சென்றபோது
கமர்ந்திட்ட சித்தர்முனி கோடானகோடி கண்டிட்டா ரெந்தனையும் யார்நீயென்றார்
சுமர்ந்திட்ட காலாங்கி நாதர்பாதம் சுடரொளியின் பதாம்புயத்தை நினைத்தேன்பாரே

விளக்கவுரை :


1747. நினைத்துமே காலாங்கி சீஷனென்றேன் நேரான போகரிஷி யென்பேரென்ன
முனைத்துமே சித்தரெல்லா மொன்றாய்கூடி முனையான வகஸ்தியனார் பக்கல்சென்று
தினைப்புடனே வாய்பொத்தி கரங்குவித்து தேவனே சாஷ்டாங்கஞ் சரணமென்றார்
பனைப்புடனே வகஸ்தியருங் கண்டுமேதான் பட்சமுடன் தானுரைப்பார் சித்தர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

1748. சித்தர்முனி ரிஷிமுதலோரொன்றாய்க்கூட்டி தெட்சணாமூர்த்தியிடம் வந்ததென்ன
சத்தமுடனெ ல்லவரு மொன்றாய்ச்சேர்ந்து சதாசிவமே சுடரொளியே தயாளவானே
பத்தியுடன் காலாங்கி சீஷனென்று பாரினிலே பேர்படைத்த சித்துவொன்று  
முத்திபெற தங்களிடங் காணவென்று முறைமையுடன் குளிகைகொண்டு வந்திட்டாரே

விளக்கவுரை :


1749. வந்திட்டா ரென்றதுமே கும்பமுனி வாகுடனே வருகவென்று விடைதந்தாரே
பந்திட்ட யெந்தனையும் பட்சம்வைத்து பாருடனே குகைக்குள்ளே கொண்டுசென்று
முந்திட்ட சாத்திரங்க ளெல்லாங்கேட்டார் மோசமில்லை யென்றென்னைக் கொண்டணைத்து
தந்திட்டா ரெந்தனுக்கு நூலுமீய்ந்தார் சதகோடி வித்தைகளுங் கற்பித்தாரே

விளக்கவுரை :


1750. கற்பித்தார் பிரமனென்ற வித்தைதானும் கருவான யேமத்தின் வித்தைதானும்
உற்பித்த சாத்திரத்தி னுளவையெல்லாம் ஒன்றாகத் தானெடுத்து உபதேசித்தார்
கற்பித்த கருவுகரணாதியெல்லாம் மார்க்கமுடன் தான்கொடுத்தார் உவமையாக
தற்பித்து செய்துமல்லோ புத்திகூறி  சகலகலைக்கியான மோதிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar