போகர் சப்தகாண்டம் 1741 - 1745 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1741 - 1745 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1741. உரைத்தேனே வதிசயங்க ளெல்லாஞ்சொன்னேன் வுலகமெலாஞ் சென்றதொரு கீர்த்தி சொன்னேன்
இரைத்தேனே தேசத்திலுளவு மார்க்க மெழிலாகக் கேட்டவுடன் கிருபைகூர்ந்து
வுரைத்துடனே யெந்தனையு மழைத்துமேதான் வாகாகக் கோட்டைக்குள் கொண்டுசென்று
நிரைத்துடனே சித்தர்முனிக் காவர்காரர் நிறையுடனே காண்பித்தார் அதீதந்தானே

விளக்கவுரை :


1742. தானான நளபதியின் கிடாரங்கண்டேன் தாக்கான சுரங்கத்தி னுலவுகண்டேன்
வேனான பச்சையென்ற மாளிகண்டேன் வெழிலான கெம்பினுட மதிலுங்கண்டேன்
மானான தன்வாசல் நான்குபக்கம் மன்னனிட காவல்களாஞ் சிங்கமுண்டு
பானான மதிலோரம் கானாருண்டு பக்கமெல்லாம் தேக்கினிடக் காடுமாமே

விளக்கவுரை :

[ads-post]

1743. காடான கோட்டைக்குள் மாளியேழு கருவான மண்டபங்க ளனேகமுண்டு
வீடான மாபுரத்தில் சித்தர்கோடி விடுதியாய் தாமிருப்பார் கூறப்போமோ
நீடான மலையுண்டு சுனையொன்றுண்டு நித்தியமும் சித்தர்முனி வாசஞ்செய்வார்
நாடான மனிதர்களுங் காணமாட்டார் நாட்டிலே கண்டவர்க ளில்லைதானே  

விளக்கவுரை :


1744. இல்லையே இன்னமொரு மார்க்கங்கேளும் யியலான ராஜனுட தேவிகோட்டை
பல்லையாம் வெகுதூரங் காந்தமாகும் பாரினிலே ராஜர்கட்கு கிட்டுமோசொல்
மல்லவே தமயந்தி பூணாரந்தான் மார்க்கமுடன் கண்டுவந்து யேங்கிநின்றேன்
சொல்லவே பூணாரந் தன்னைத்தானும் சூட்சமுடன் கண்டுவந்தேன் போகர்தாமே

விளக்கவுரை :


1745. தாமேதான் சித்தர்முனி ரிஷிகள்தாமும் தயவுடனே யெந்தனுக்கு வதீதஞ்சொன்னார்
போமேதான் குகைமுத்தும் கிடாரந்தன்னை பொங்கமுடன் தான்கொண்டு காண்பித்தார்கள்
நாமேதான் கண்டுமனமுவந்துமெத்த நாதாக்கள் கிருபையது மிகவும்பெற்றேன்
ஆமேதான் விசுவாச மருளும்பெற்று அப்பனே சீனபதி யமர்ந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar