1736. ஈடான தேசமதுகண்டோருண்டோ
யெழிலான மாபுரமும் தங்கவர்ணம்
கோடாகோடி பொருள்களங்குண்டு
குகையுண்டு சுனையுண்டு தடாகமுண்டு
ஊடான மிருகங்களனேகமுண்டு
வுத்தமனே புலிபசுவுமொன்றோடொன்று
காடான வனாந்திரத்தி
லுறவுகொண்டு கருணையுட னெப்போதும் குடியுமாமே
விளக்கவுரை :
1737. ஆமேதான் கோட்டைக்குள்
குளிகைபூண்டு அப்பனே சுரங்கத்தின் வழியாக
நாமேதான் சென்றல்லோ
பார்க்கும்போது நாட்டமுட னரசாட்சி கொலுக்கூடந்தான்
போமேதான் கிட்டயல்லோ
சென்றுநின்றேன் பொலிவான நவரத்தினங் கசிதத்தாலே
மாமேதான் பிரதமைகள்
சூழ்ந்துநிற்க மயக்கமுடன் சிம்மாதனங் கண்டேன்தானே
விளக்கவுரை :
[ads-post]
1738. தானான மேற்புறத்தில் பக்கஞ்சென்றேன்
தாக்கான கொலுமாளி சலவைக்கூடம்
வேனான கற்றூணாம்
வயிரக்கல்லாம் வெழிலான பக்கமெல்லாம் பச்சைக்கல்லாம்
மானான தேவதச்சன் மயனினாலே
மார்க்கமுடன் புஷ்பரதமொன்று கண்டேன்
கானான கைலாசமென்பார்தானுங்
காசினியிற் கண்டவரை விண்டிலேனே
விளக்கவுரை :
1739. விண்ணவே தலைவாசல்
பக்கம்போனேன் விராஜனிடகாவல் கணமாயிரம்பேர்
திண்ணமுட னங்கிருந்தார்
தவசியோர்கள் தீர்க்கமுட னெந்தனையுங் கண்டிட்டார்கள்
எண்ணமுடன் யானுமல்லோ
கண்டபோது எனைக்கொல்ல திருஷ்டித்துப் பார்த்தாரென்னை
அண்ணலென்ற காலாங்கி
தனைநினைந்தேன் அப்போதே யெந்தனையுஞ் சூழ்ந்திட்டாரே
விளக்கவுரை :
1740. சூழவே யடியேனுங்
கிடுகிடுத்து துப்புறவாய் தாள்பணிந்து சரணஞ்சொன்னேன்
தாழவே காவற்காராயிரம்பேர்
சார்புடனே யெந்தனையுமாரென்றார்கள்
மீளவே யானுமல்லோ தீரங்கொண்டு
மேன்மையுட னவர்களுக்கு வதீதஞ்சொன்னேன்
ஆளவே யெந்தனையும்
வரலாறுகேட்டார் அப்பனே அடிமுதலு முரைத்திட்டேனே
விளக்கவுரை :

