போகர் சப்தகாண்டம் 1731 - 1735 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1731 - 1735 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1731. விடைதந்தார் சித்தரகளுந் தானுங்கேட்டு விரைவுனே யோடிவந்து வுண்மைகூறி
படையுடனே கூட்டமதா யொன்றாய்கூடிப் பரிவாக வுபதேசம் பாலித்தேதான்
சடையுடனே ரிஷிமுனிவர் சித்தர்தாமும் சமைத்திட்டார் சாபமதையெந்தனுக்கு
தடைநீங்கி கண்ணபிரான் விடைகள்பெற்று சாங்கமுடன் சீனபதிவந்திட்டேனே

விளக்கவுரை :


1732. வந்தவுடன் கமலமுனி தன்னைக்கண்டேன் வாகுடனே கண்ணபிரான் வளமைசொன்னேன்
நொந்து மனமுருகியல்லோ சித்தரெல்லாம் நொடிக்குள்ளே யெந்தனுக்கு சாபஞ்சொன்னார்
வந்தபெண்களெல்லாரு மென்னைக்கண்டு கருணைபெற சாபமதை தீர்க்கவென்று
அந்தமுடன் கண்ணபிரான் பக்கல்சென்று அடிவணங்கி சாபமதை தீரென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

1733. என்றயிலே கண்ணபிரான் முனிவர்தம்மை யெழிலாகத் தாமழைத்து வுறுதிசொன்னார்
அன்றையிலே ரிஷிமுனிவர் சித்தர்கூடி அகமுடனே முகமலர்ந்து சாபந்தீர்ந்து
இன்றையிலே சாபமது தீர்ந்ததென்று யெழிலுடனே சீனபதிபோகவென்று 
சென்றுடனே போகவென்று விடையுந்தந்தார் சிறப்புடனே தம்பாதம் கண்டிட்டேனே

விளக்கவுரை :


1734. கண்டேனே காலாங்கி கடாட்சத்தாலே கருணைபெற யெந்தனுக்கு விடைதாவென்ன
தெண்டமுடன் விடைபெற்று நிடததேசம் திரும்பினேன் குளிகைகொண்டு வெகுகாலந்தான்
தண்டுலவு மாலயனைதரிசித்தேதான் சாங்கமுடன் நளபதியைக்காணவென்று
அண்டமுடன் குளிகையிட்டு ராஜதேகம் அப்பனே வந்திட்டேன் யானும்பாரே

விளக்கவுரை :


1735. யாரேதான் சக்கரவர்த்தி பரிவான மாளிகையுங் கோட்டைகண்டேன்  
சீரேதான் சித்திரரதம் தங்கமாகும் சிறப்பான கோட்டைகளும் குருந்தக்கல்லாம்
நேரேதான் வைடூரிய மண்டபந்தான் நெடிதான வாகனங்கள் தங்கவண்ணம்
ஊரேதான் பொன்னகரங் கைலையென்பார் வுத்தமனே நளபதிக்கு ஈடாகாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar