போகர் சப்தகாண்டம் 1726 - 1730 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1726 - 1730 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1726. போனதினா லதிசயங்கள் மெத்தவுண்டு பூதலத்தில் ஆருந்தான்கண்டதில்லை
நானதினால் சிலகாலமங்கிருந்தே நயமுடனே பெண்களெல்லாம் வெண்மைகண்டேன்
தானவனாம் கமலமுனி யங்கிருந்தார் சாஷ்டாங்க தெண்டனிட்டு தாள்பணிந்தேன்
ஆனதினா லெந்தனுக்கு வுபதேசங்களனேகமதாய் தானுரைத்தார் வதிசயந்தானே

விளக்கவுரை :


1727. தானான வதிசயங்க ளனேகஞ்சொன்னேன் தகமையான சீனபதிசிறப்புஞ்சொன்னேன்
வேனான மேருகிரி போனேனம்மா வெழிலான விருவத்தோர் வரைதானுண்டு
கோனான வேழுவகை சொன்னேனம்மா கோடிமுனிசித்தர்களைக் கண்டேனென்றேன்
பானான வடிவேலர் தயிலமொன்றுண்டு பாங்கான பொன்மானுங் கண்டிட்டேனே  

விளக்கவுரை :

[ads-post]

1728. கண்டேனே சித்தர்வர்க்கங் கோடாகோடி காணாத வரைதேசமனந்தமுண்டு
அண்டான முனியறியாக் காடுங்கண்டேன் அங்குள்ள வதிசயங்களெல்லாஞ்சொன்னேன்
பண்டமுடன் கிடாரங்கள் வைப்புசொன்னேன் பாங்கியர்களெல்லோரு மதிசயித்தார்
தெண்டமுட னெந்தனுக்கு சாபந்தீர்த்து திகழுடனே யனுப்பவென்று விடைகேட்டேனே

விளக்கவுரை :


1729. கேட்டவுடன் பெண்களெல்லாங் கிருபைவைத்து கிருபையுடன் கண்ணபிரான் பக்கல்வந்து
கோட்டமுடன் பன்னீராயிரம்பேரும் நுணுக்கமுடன் தானுரைத்தா ரென்னைத்தானும்
தேட்டமுடன் சீனபதியிருந்த சித்தன் திறமுடனே லோகமெல்லாம் காணவென்று
வாட்டமுடன் குளிகையது பூண்டுகொண்டு வந்திட்டானும்பர்பதி யென்றிட்டாரே

விளக்கவுரை :


1730. என்னவே பெண்களெல்லாமொன்றாய்கூடி யெழிலாக யெந்தனுக்கு சாபம்நீக்க
நன்னயமாய்க் கண்ணபிரான் தன்றமக்கு நலமுடனே தாமுரைத்தா ரதீதமெத்த
சொன்னவுடன் கண்ணபிரான் கடாட்சம்வைத்து சுகமுடனே சித்தர்தம்மை வரவழைத்து
பன்னயமாய் சாபமதைநீக்கவென்று பட்சமுட னெந்தனுக்கு விடைதந்தாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar